இந்திய தோட்டக்கள்ளன்
இந்திய பொன்னுத் தொட்டான் அல்லது இந்திய தோட்டக்கள்ளன் ("Indian Pitta", Pitta brachyura) என்பது ஓர் இடைப்பட்ட அளவுள்ள குருவி வரிசையைச் சேர்ந்த பறவை ஆகும்.[1] இவை பொதுவாக மரக்கிளைகளில் வந்து அமரும் வகைப் பறவைகளும் குயிலும் (பாடும்) பறவைகளும் ஆகும். இமயமலைக்குத் தெற்கே இனப்பெருக்கம் செய்யும் இப்பறவை குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசைப் போகும். ![]() இது சுலபமாக நம் கண்களில் படுவதில்லை, ஏனெனில், இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த கிளைகள் இடையே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும். இது இரை தேடும்போது தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத் தொட்டான் தேவை ஏற்படும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. பெயர்க்காரணம்![]() பிட்டா என்றால் “சிறு பறவை” என்று தெலுங்கில் பொருள்.[3] இந்தியில் இதன் பெயர் நவ்ரங். அதாவது ஒன்பது நிறங்கள் என்று பொருள். வானவில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு, வெள்ளை நிறங்கள் இரண்டும் சேர்ந்து ஒன்பது வண்ணங்களாகிறது. பஞ்சவர்ணக் குருவிஇதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, காசுக்கரடி, கஞ்சால் குருவி, காளி (மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு.[4] வகைகள்ஆசிய தோட்டக்கள்ளன் நான்கு வகைப்படும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia