Sang Saka Merah-Putih Bendera Merah-Putih Merah-Putih
அளவு
2:3
ஏற்கப்பட்டது
11 நவம்பர் 1293 (மயாபாகித்து பேரரசு) 28 அக்டோபர் 1928 17 ஆகத்து 1945 (அசல்) 17 ஆகத்து 1950 (அரசு)
வடிவம்
சிவப்பு; வெள்ளை நிறம்
வடிவமைப்பாளர்
ஜெயகாட்வாங் (Jayakatwang)
இந்தோனேசிய கொடி (இந்தோனேசியம்: Bendera Negara Indonesia; ஆங்கிலம்: Flag of Indonesia) என்பது இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசியக் கொடி ஆகும். இந்தக் கொடி சாங் மேரா பூத்தே (Sang Merah Putih), சாங் சக்கா மேரா பூத்தே (Sang Saka Merah Putih), மேரா பூத்தே (Merah Putih) என்று பரவலாகவும் அழைக்கப்படுகிறது.[1]
இது 1945 ஆகத்து 17 அன்று ஜகார்த்தாவில் உள்ள 56 புரோகிலமாசி சாலையில் (முன்னர் தைமூர் சாலை) இந்தோனேசிய விடுதலை நாளின் போது அறிமுகப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டது; மேலும் 27 திசம்பர் 1949 அன்று டச்சுக்காரர்கள் இந்தோனேசிய இறையாண்மையை முறையாக மாற்றியபோது மீண்டும் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து கொடியின் வடிவமைப்பு மாறாமல் உள்ளது.
பொது
இந்தோனேசியக் கொடியின் நிறங்கள் 13-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் பதாகையிலிருந்து பெறப்பட்டதாகவும் அறியப்படுகிறது.[2]
இருப்பினும், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண அடையாளங்கள்; பழைய ஆசுத்திரோனீசிய புராணங்களில் காணப் படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் இந்த நிறங்கள் ஆசுத்திரோனீசியா முழுவதும் பல நாடுகளின் கொடிகளில் காணப்படுகின்றன.[3]