இந்தோனேசிய ரூபாய்
இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா (rupiah, Rp) இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு (ஐடிஆர்) IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா (روپیہ),(रुपया), மற்றும் சமசுகிருத வேரிலிருந்து (रूप्य; வார்ப்பு வெள்ளி) வந்துள்ளது. பேச்சு வழக்கில் இந்தோனேசியர்கள் வெள்ளி என்பதற்கான இந்தோனேசியச் சொல்லான "பெராக்" என்பதையும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரூபியாவும் 100 சென்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; பணவீக்கத்தால் சென் நாணயங்களும் வங்கித்தாள்களும் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன. ரியாயு தீவுகளும் நியூ கினியின் இந்தோனேசியப் பகுதியும் முன்பு தங்களுக்கேயான ரூபியாவைப் பயன்படுத்தி வந்தன; ஆனால் முறையே 1964, 1971ஆம் ஆண்டுகளில் இருந்து இங்கும் தேசிய ரூபியாவே செயலாக்கப்பட்டது. தற்போது புழக்கத்தில் உள்ளவைதற்போது 50 ரூபியா முதல் 1000 ரூபியா வரை நாணயங்கள் புழங்கி வருகின்றன. (ஒரு ரூபியா, அலுவல்முறையாகச் செல்லும் என்றாலும் நடைமுறையில் அதற்கு மதிப்பில்லை என்பதால் சுற்றில் இல்லை.) 1000 ரூபியா மதிப்பிலிருந்து 100,000 ரூபியா மதிப்பிலான வங்கித்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க டாலருக்கு 13,448 ரூபியாக்கள் (அக். 2015) என்ற செலாவணியில் இந்தோனேசியாவின் மிக உயர்ந்த மதிப்புள்ள வங்கித்தாள் ஏறத்தாழ அமெரிக்க $7.45 இற்குச் சமமாக உள்ளது. நாணயங்கள்தற்போது இருவகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன: அலுமினியம், வெண்கலம். ஈருலோக நாணயங்கள் 1991–1998 காலத்திலும், எடை குறைந்த அலுமினிய நாணயங்கள் 1999 முதலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறைந்த மதிப்பினாலும் 100 ரூபியாவிற்குக் கீழான நாணயங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாலும் பணத்தொகைகள் அடுத்த மேல் அல்லது கீழ்த் தொகைக்கு முழுமையாக்கப்படுகின்றன; பல்லங்காடிகளிலும் கடைகளிலும் கடைசி சில ரூபியாக்களுக்கு மாற்றாக இனிப்புகள் வழங்குவதும் வழமையாக உள்ளது.[2] நாணயத்தாள்கள்தற்போது 1000 (2000 ஆண்டு வெளியானது), 5000 (2001), 20,000, 100,000 (2004), 10,000, 50,000 (2005) 2000 (2009) நாணயத்தாள்களும் 2010 இல் புதிய பதிப்பாக வெளியிடப்பட்ட 10,000 மற்றும் 2011 இல் வெளியிடப்பட்ட 20,000, 50,000, 100,000 நாணயத்தாள்களும் புழங்கி வருகின்றன. 1998–1999 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் சனவரி 31, 2008 முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டது; இருப்பினும் இவற்றை இந்தோனேசிய வங்கியில் சனவரி 31, 2018 வரை மாற்றிக் கொள்ளலாம்.[3] குறைந்த மதிப்புள்ள நாணயத்தாள் இந்திய ரூபாய் 6.7க்குச் சமமாதலால், பேருந்துச் சீட்டுக்களுக்குக் கூட நாணயத்தாள்களே பயன்படுத்தப்படுகின்றன.[4] 1000 ரூபியாவிற்கு மாற்றாக 2000 ரூபியா நாணயத்தாள்களை வெளியிட முடிவெடுத்து மிகுந்த நாட்களுக்குப் பிறகு 2000 ரூபியா நாணயத்தாள்கள் சூலை 9, 2009 இல் வெளியிடப்பட்டன.[5] இருப்பினும் 1000 ரூபியா நாணயத்தாள்களும் 1000 ரூபியா நாணயங்களும் இரண்டுமே புழங்கி வருகின்றன. பாதுகாப்புக் கூறுகள்![]()
இந்திய ரூபாய் மதிப்பில்ஆகஸ்டு 2016 ஆண்டு நாணய மாற்று நிலவரப்படி ஒரு இந்திய ரூபாய்க்கு, 196.289 இந்தோனேசிய ரூபாய் என்ற விகிதத்தில் உள்ளது. [6] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia