இன்சமாம் உல் ஹக்இன்சமாம் உல் ஹக்(Inzamam-ul-Haq (;Punjabi, Urdu: انضمام الحق; ⓘ (பி. மார்ச் 3, 1970) [1] முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார்[2][3]. இவர் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்கு தலைவராக இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள பாக்கித்தானிய வீரர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒட்டுமொத்தமாக 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள வீரர்களில் ஒருவர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணி தவிர யுனைடெட் பேங்க் லிமிடெட், பைசலாபாத், ராவல்பிண்டி, பாக்கிஸ்தான் தேசிய வங்கி மற்றும் நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையம் ஆகிய துடுப்பாட்ட அணிகளுக்காகவும் விளையாடினார். 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் மூலம் பரவலாக இவர் அறியப்படுகிறார். பத்தாண்டு காலங்களாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அணியின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். 2007 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்ட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தான் வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜாவெட் மியன்டாட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை இழந்தார். ஓய்வு பெற்ற பிறகு இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரின் முதல்பருவத்தில் ஐதராபாத் ஹீரோஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் இரண்டாவது ஆண்டில் லாஹூர் பாட்ஷா'ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் முழுவதும் பாக்கித்தான் அணி வீரர்களே இருந்தனர். ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் அணி வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இவரை பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் நியமனம் செய்தது. ஆரம்பகால வாழ்க்கை2010 ஆம் ஆண்டில், இன்சாம் மற்றும் சயீத் அன்வர் ஆகியோர் இணைந்து மீட் ஒன் எனும் இறைச்சிக் கடையினைத் தொடங்கினர்.[4][5] 2017 ஆம் ஆண்டில், இன்சமாம் லாகூரில் லெஜண்ட்ஸ் ஆஃப் இன்சமாம் உல் ஹக் என்ற துணிக்கடையை அறிமுகப்படுத்தினார்.[6] அவரது மருமகன் இமாம் உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார்.[7] உள்ளூர் போட்டிகள்இன்சமாம் தனது சொந்த ஊரான முல்தானுக்காக 1985 இல் தனது முத்ல்தரத் துடுப்பாட்டப் பொட்டிகளில் அறிமுகமனார்.[8][9] யுனைடெட் பேங்க் லிமிடெட், பைசலாபாத், ராவல்பிண்டி, பாக்கிஸ்தான் தேசிய வங்கி மற்றும் நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையம் ஆகிய துடுப்பாட்ட அணிகளுக்காகா உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்.[8] மாகாணத் துடுப்பாட்ட போட்டிகள்இன்சமாம் இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆகஸ்ட் 2007 இல் தனது 37 வயதில் அறிமுகமானார்.அந்தத் தொடரில் யூனிச் கான் முதலில் தேர்வானார். ஆனால் அவர் 2007 ஐ.சி.சி உலக இருபது -20 போட்டியில் பாகிஸ்தானுக்காக விளையாடச் சென்றதனால் யூனஸ் கானுக்கு மாற்றாக அவர் யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் [10] சேர்ந்தார். அந்தத் தொடர் முழுமைக்கும் அவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். சர்வதேசப் போட்டிகளில் இவரின் துடுப்பாட்டத் திறனை மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் செயல்படுத்தத் தவறினார். இந்திய கிரிக்கெட் லீக்2007 ஆம் ஆண்டில், இன்சமாம் திட்டமிடப்படாத இந்திய கிரிக்கெட் லீக்கில் (ஐசிஎல்) சேர்ந்தார். தொடக்க போட்டியில், ஹைதராபாத் ஹீரோஸின் தலைவராக இருந்த இன்சமாம் 5 போட்டிகளில் 141 ஓட்டங்கள் எடுத்தார். 2008 மார்ச்சில் நடந்த போட்டியில், இன்சமாம் லாகூர் பாட்ஷாக்களின் தலைவராக இருந்தார், இந்தத் துடுப்பாட்ட அணியானது பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்டதாக இருந்தது. இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவது உலகந்ததல்ல என பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் வீரர்களுக்கு அரிவுறுத்தியது. அது ஒரு அங்கீகாரமற்ற தொடர் எனக் கூறியதனால் அதில் இடம்பெரும் வீரர்கள் பாக்கித்தானில் நடைபெறும் எந்த போட்டிகளிலும் விளையாட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொடரில் இவருக்கு ரூ. 100 மில்லியன் (அமெரிக்க $ 1,100,000) ஒப்பந்தத் தொகையாக வழங்கப்பட்டது. இது பிரையன் லாரா போன்றவர்களுடன் அந்தத் தொடரில் பங்கேற்கும் மற்ற வீரர்களை விட மிக அதிகமான தொகையாக இருந்தது. சர்வதேச போட்டிகள்1991 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 20 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 60 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான துவக்கத்தை அளித்தார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் நூறினைப் பதிவு செய்தார். நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 326 ஓட்டங்கள் எடுத்தார். இன்சமாம் உல் ஹக்கை ,அன்றைய துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்த இம்ரான் கான் 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கு தேர்வு செய்தபோது இவரின் பெயர் பலரும் அறியாததாக இருந்தது. இவர் பல வரிசைகளில் விளையாடினாலும் ஒரு சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஓக்லாந்தில் ,நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான அரையிறுதியில் இவர் எழுச்சி கண்டார். நியுசிலாந்து அணி 262 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. சிறப்பாக விளையாடிய இவர் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு உதவினார்.[11][12] இந்தப் போட்டியானது சிறப்பான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[13] மார்ச் 27, 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் எடுத்து முதன்முதலாக தொடரை வெல்வதற்கு உதவினார்.[14] இன்சமாம் ஒருநாள் போட்டிகளில் 83 அதிக அரைசதங்களை அடித்து சாதனை படைத்தார், இது தற்போது சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரால் முறியடிக்கப்பட்டது .[15] ஒருநாள் போட்டிகளில் (டெண்டுல்கருக்குப் பிறகு) 10,000 ரன்கள் எடுத்த இரண்டாவது துடுப்பாட்ட வீரராகவும் ஆனார். மேலும் ஐ.சி.சி உலக லெவன் போட்டியில் தேர்வு மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்காக 2005 ஐ.சி.சி விருதுகளில் இடம் பெற்றார் . 2007 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடினார் [16] சான்றுகள்
வெளியிணைப்புகள்Dazzling, delicate; a reassuring presence – Cricinfoவார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் |
Portal di Ensiklopedia Dunia