இயோன் மோர்கன்
இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் (Eoin Joseph Gerard Morgan, பிறப்பு: செப்டம்பர் 10, 1986) என்பவர் அயர்லாந்தில் பிறந்த இங்கிலாந்துத் துடுப்பட்டக்காரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தலைவராகச் செயல்படுகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் ஒரு இடது-கை மட்டையாளர் ஆவார்.இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பனனட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடினார். 2019ஆம் ஆண்டு இவரது தலைமையில் இங்கிலாந்து அணி முதன்முறையாக துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது. டிசம்பர் 2019 நிலவரப்படி இவர் இங்கிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவராகவும் அதிக ஓட்டங்கள் எடுத்தவராகவும் உள்ளார்.[2] 19 டிசம்பர் 2014 அன்று அலெஸ்டர் குக் ஒருநாள் துடுப்பாட்ட அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், மோர்கன் 2015 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் இ20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் தலைவராக இருந்த போட்டிகளில் 4 நூறுகள் அடித்துள்ளார்.இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவர் எனும் சாதனையினைப் படைத்தார். 2019 ஆம் ஆண்டின்படி, மோர்கன் இங்கிலாந்து அணியின் எல்லா நேரத்திற்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். [3] ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைநூறுகள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையையும் இவர் படைத்துள்ளார், மேலும் 2019 ஐசிசி உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான ஆறுகளை அடித்தவர் எனும் சாதனையினைப் படைத்தார்.இவர் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 17 ஆறு ஓட்டங்களை எடுத்தார். ஆரம்பகால வாழ்க்கைமோர்கன் டப்லினில் பிறந்து, ரஷ் நகரில் வளர்ந்தார், அங்கு இவரது தந்தையுடன் இருந்தார். [4] இவரது தாய் இங்கிலாந்து மரபினைச் சேர்ந்தவர் ஆவார். [5] இவர் ரஷ் துடுப்பாட்ட சங்கத்தில் துடுப்பாட்டம் விளையாடக் கற்றுக்கொண்டார். அங்கு இவரது தந்தை மூன்றாம் லெவன் அணியின் தலைவராக இருந்தார். [6] லீசன் தெருவில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகப் பள்ளியில் கல்வி பயின்றார். [7] அங்கு இவர் லீன்ஸ்டர் மூத்த பள்ளிகளுக்கான கோப்பையில் விளையாடினார். தனது இளம் வயதிலேயே மோர்கன் வாரத்திற்கு இரண்டு முறை ஹர்லிங் விளையாடினார், இது ஒரு மட்டையாளராக இவரது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியது. இந்த நேரத்தில் இவர் தனது துடுப்பாட்ட கல்வியை மேற்கொள்வதற்காக தெற்கு லண்டனில் உள்ள டல்விச் கல்லூரியில் சிறிதுகாலம் பயின்றார். அங்குதான் இங்கிலாந்திற்காக விளையாட வேண்டும் என நினைத்தார். [8] இவர் அயர்லாந்தின் இளைஞர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் மட்டத்தில் இடம்பிடித்தார். [9] 2004 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஐரிஷ் 19 வயதுக்குட்பட்ட அணியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார். [10] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் அயர்லாந்தின் தலைவராக இருந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia