இராமநாதபுரம் சமஸ்தானம்
![]() ![]() ![]() இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு (Ramnad Estate) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும். சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளாக இருந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் சேதுகாவலர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். [1][2][3] வரலாறுமதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4] பரப்பு & மக்கள் தொகைஇராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . சென்னை மாகாணத்தின் பெரும் சீமையாகும். . வருவாய் வட்டங்கள்இராமநாதபுரம் சீமை, இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, பள்ளிமடம் மற்றும் முதுகுளத்தூர் என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராமேசுவரம் ஆகும். சேதுபதிகள் பட்டியல்
சுதேச சமஸ்தான மன்னர்கள்:
இவற்றையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia