இரும்பு(III) செலீனைட்டு (Iron(III) selenite) என்பது Fe2(SeO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். நீரற்ற வடிவத்திலும், பல்வேறு நீரேற்று வடிவங்களாகவும் இரும்பு(III) செலீனைட்டு காணப்படுகிறது. 1.05 காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பு கொண்ட பெரிக் குளோரைடும் செலினசு அமிலம் அல்லது சோடியம் செலீனைட்டும் சேர்ந்து வினைபுரிவதால் இதன் எழுநீரேற்று உற்பத்தியாகிறது.[3] இரும்பு(III) செலீனைட்டின் ஐந்து நீரேற்று Fe2(OH)3(H2O)2(HSeO3)3 என்ற கட்டமைப்பிலுள்ளது.[4] முந்நீரேற்றின் ஒற்றை படிக மாறுபாடு அதன் கட்டமைப்பில் இரண்டு FeO6 எண்முகங்களும் ஒரு SeO32− நாற்கோணக வடிவவியலையும் கொண்டுள்ளது என்பதையும் சோதனை காட்டுகிறது.[1]
இரும்பு(III) செலீனைட்டின் நீரற்ற உப்பு 534 ° செல்சியசு வெப்பநிலையில் Fe2O3·2SeO2 சேர்மங்களாக சிதைவடைகிறது, 608 °செல்சியசு வெப்பநிலையில் 4Fe2O3·SeO2 சேர்மத்தை உருவாக்குகிறது, இறுதியாக 649 °செல்சியசு வெப்பநிலையில் Fe2O3 சேர்மம் கிடைக்கிறது.[5]
↑Pinaev, G. F.; Volkova, V. P. Preparation and some properties of iron(III) selenite. Obshchaya i Prikladnaya Khimiya, 1970. 3: 33-39. ISSN: 0369-7045.
↑Maldagalieva, R. A.; Shokanov, A. K. Infrared spectroscopic study of the state of water molecules in crystal hydrates of transition metal selenites. Trudy Khimiko-Metallurgicheskogo Instituta, Akademiya Nauk Kazakhskoi SSR, 1973. 22: 16-20. ISSN: 0516-0324.
↑Bakeeva, S. S.; Muldagalieva, R. A.; Buketov, E. A.; Pashinkin, A. S. Thermal stability of neutral iron selenite. Trudy Khimiko-Metallurgicheskogo Instituta, Akademiya Nauk Kazakhskoi SSR, 1970. 15: 88-92. ISSN: 0516-0324.