பெர்ரிக் சிடீயரேட்டு (Ferric stearate) என்பது C54H105FeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். உலோகக் கரிமச் சேர்மமான இச்சேர்மம் இரும்பும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[2][3] கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதியாக இருப்பதால் இது ஓர் உலோக சோப்பு என்றும் கருதப்படுகிறது.[4]
தயாரிப்பு
இரும்பு ஆக்சைடும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் பெர்ரிக் சிடீயரேட்டு உருவாகும்.
மூவெத்திலீன் ஈரமீன் முன்னிலையில் இரும்பு குளோரைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தியும் இதை தயாரிக்கலாம்.[5]
இயற்பியல் பண்புகள்
ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக பெர்ரிக் சிடீயரேட்டு உருவாகிறது.
பெர்ரிக் சிடீயரேட்டு கரிமத் தொகுப்பு வினைகளீல் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பகுப்பாய்வு வேதியியலில் ஒரு வினையாக்கியாகவும் உயிர் வேதியியலில் நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7]
↑Basel, S., Bhardwaj, K., Pradhan, S., Pariyar, A., & Tamang, S. (2020). DBU-Catalyzed One-Pot Synthesis of Nearly Any Metal Salt of Fatty Acid (M-FA): A Library of Metal Precursors to Semiconductor Nanocrystal Synthesis. ACS Omega. எஆசு:10.1021/acsomega.9b04448