உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்
அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள பல 1,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணீசுவரர் (பயறு மாலை அணிந்த ஈசுவரர்) ஆகும். அம்பிகையின் திருப்பெயர் சுகந்தகுந்தளாம்பிகை அல்லது நறுமலர் பூங்குழல் நாயகி ஆகும். முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளார். தலபுராணம்முன்னர் ஒரு மன்னன் இக்கோயில் கட்ட நிதி திரட்ட வேண்டி மிளகுக்கு அதிக வரி விதித்திருந்தானாம்[சான்று தேவை]. அதனால், இவ்வழியே மிளகு கொண்டு சென்ற ஒரு வணிகன் சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக தான் கொண்டு சென்ற மிளகு மூட்டையைப் பயறு என்று சொல்லிச் சென்றானாம். அவன் விருத்தாசலத்தில் மூட்டையைத் திறந்து பார்த்தபொழுது அவன் கொண்டு சென்ற மிளகு எல்லாம் பயறாக இருக்கக் கண்டு, தன் தவறை உணர்ந்து மீண்டும் இக்கோயிலை அடைந்து, சுங்கம் செலுத்தி இறைவனை இறைஞ்ச, எம்பெருமான் அவன் பயறை எல்லாம் மீண்டும் மிளகாக்கித் தந்தார் என்றொரு கதை இக்கோயிலை குறித்து உண்டு. இத்தலத்து விநாயகரின் பெயர் வில்வளைத்த விநாயகர் ஆகும். அர்ச்சுனனின் தன் காண்டீபம் குறித்து மிகுந்த அகந்தை கொண்டிருந்தபோது, அதை வளைத்து அவன் கர்வத்தை ஒடுக்கினார் என்பர்[சான்று தேவை]. வழிபட்டோர்அகத்தியர், பிரம்மன், இராமன், அங்காரகன், பஞ்சபாண்டவர்கள், செமதக்கினி முனிவர், வேதாளம் ஆகியோர் வழிபட்ட தலம். சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் அவர்களின் விருப்பமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது[சான்று தேவை] பூஜைகள்தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 6 அபிஷேகங்கள்ஆண்டு தோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடக்கும். அதன்படி சித்திரையில் திருவோணம், மார்கழியில் திருவாதிரை, ஆனியில் உத்தரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தசியிலும் என வருடத்தில் 6 நாட்களில் நடராஜருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அமைவிடம் & போக்குவரத்து வசதிகள்திருச்சி - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்கு திசையில்(திருச்சி நெடுஞ்சாலையில்) 9 கி.மீ. தொலைவில் உள்ள உடையார்பாளையம் நகரில் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலிருந்து உடையார்பாளையத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. [1] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia