சிதம்பரம் மக்களவைத் தொகுதி (Chidambaram Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 27வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்குப்பின், குன்னம் தொகுதி இதில் இணைக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- குன்னம்
- அரியலூர்
- ஜெயங்கொண்டம்
- புவனகிரி
- சிதம்பரம்
- காட்டுமன்னார்கோயில் (தனி)
மக்களவை உறுப்பினர்கள்
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
18வது மக்களவைத் தேர்தல்(2024)
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
|
|
|
|
11,53,192
|
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் விசிக வேட்பாளர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளரான, சந்திரசேகரனை 3,219 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம்
|
தொல். திருமாவளவன்
|
பானை
|
விசிக
|
1,828
|
5,00,229
|
43.38%
|
சந்திரசேகர்
|
|
அதிமுக
|
1,578
|
4,97,010
|
43.1%
|
இளவரசன்
|
|
அமமுக
|
89
|
62,308
|
5.4%
|
சிவஜோதி
|
|
நாம் தமிழர் கட்சி
|
142
|
37,471
|
3.25%
|
நோட்டா
|
-
|
-
|
56
|
15,535
|
1.35%
|
இரவி
|
|
மக்கள் நீதி மய்யம்
|
74
|
15,334
|
1.33%
|
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [1]
|
வித்தியாசம்
|
77.30%
|
79.61%
|
↑ 2.31%
|
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் பாமகவின் எ. பொன்னுச்சாமியை 99,083 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்