உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் பயறணீநாத சுவாமி திருக்கோவில் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் பல 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள உடையார்பாளையம் அரண்மனை மிகவும் தொன்மை வாய்ந்தது.[4]
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இதனைச் சிறப்புடன் ஆண்டிருக்கிறார்கள். இது 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு 'உடையார்பாளையம்' என்னும் பெயருண்டானது.
புராணக் காலபெயர்கள்
ஜில்லிகா வனம்
பத்ராணீயம்
பிரம்மபுரி அல்லது பிரம்மபுரம்
இராகவன்புரி அல்லது இராமஈசுவரம்
அங்காரகபுரி அல்லது அங்காரகேசன்புரி அல்லது அங்காரகேசன்புரம்
வணிகேசன்புரி அல்லது வணிகேசன்புரம்
திருமுற்கபுரி அல்லது திருமுற்கபுரம்
பயறணீச்சுரம் அல்லது பயறணீசுவரம் அல்லது பயறணீநாதர்புரம்
பயறணீமகாலிங்கபுரி அல்லது பயறணீமகாலிங்கபுரம்
பிற பெயர்கள்
கோயில்கள் நகரம்
காஞ்சி பல்லவர்கள் நகரம்
பாளையக்காரர் நகரம்
ஜமீன்தார் நகரம்
பட்டு நகரம்(பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் சிறந்த பட்டு உற்பத்தி நகராகவே இந்நகரம் இருந்துள்ளது).
இரண்டாம் காஞ்சிபுரம்(பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் காஞ்சிபுரம் நகராகவே இந்நகரம் இருந்துள்ளது).
சோழர்-பல்லவர் காலக் கலை நகரம்
அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் உடையார்பாளையம்.
பழைமை வாய்ந்த இந்நகரைத் தலைமையகமாகக் கொண்டு பல ஊர்களை பாளையத்துக்காரர்கள் ஆண்டார்கள். இன்றளவிலும் இந்நகரில் அரண்மனை சிதலடைந்த வடிவில் இருக்கிறது. இன்றளவும் அங்கே அரச வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்காலத்திலிருந்து நகரத்தின் உள்கட்டமைப்பு செம்மையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சிவன் கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.[சான்று தேவை] இங்கு சிதிலமடைந்த பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. "தமிழ்த் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர்.
திரைப்படப் படப்பிடிப்பு
திருச்சி மண்டலத்தில் பாரம்பரியமிக்க நகராக உடையார்பாளையம் நகரம் கருதபடுவதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் சிறந்த படப்பிடிப்புத் தளமாக உடையார்பாளையம் நகரம் மாறி வருகிறது. இந்நகரைப் பற்றி அறிந்த தமிழக, ஆந்திர - தெலுங்கானா மாநில திரைப்படத்துறை தொடர்ந்து திரைப்படப் படப்பிடிப்புகள் இந்நகரில் எடுத்தவண்ணம் உள்ளனர் .
முக்கிய நகர சிறப்புகள்
இந்தியாவில் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று உடையார்பாளையம்.
உடையார்பாளையம் நெடிய சரித்திர வரலாறு மற்றும் ஆன்மீக புராணங்களின் பின்னணியுடைய புண்ணிய பூமி.
உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி ஆலய தெப்பம் அழகு.
இந்திய - தமிழக வரலாற்று பக்கங்களை உள்ளடக்கிய நகரம் தான் உடையார்பாளையம்.
சித்தர்களும் , தீட்சிதர்களும் , ஞானிகளும், அரசியல் சாணாக்கியர்களும் , பகுத்தறிவாளர்களும் , சான்றோர்களும் , புகழ் பெற்ற படைப்பாளிகளும் , கலைஞர்களும் வாழ்ந்த சிறப்புமிக்க நகரம்.
பழமொழிகளில் உடையார்பாளையம்
பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
இந்த பழமொழி ஒருவரின் திறமையின்மையையும், அவர்களின் வீண் பெருமையையும் சுட்டிக்காட்டுகிறது.
பொருள்:
ஒருவர் தனது சொந்த இடத்தில் (உள்ளூரில்) எளிதான காரியத்தை (ஓணான் பிடித்தல்) கூட செய்யத் திறனற்றவராக இருந்தால், அவர் தொலைதூர இடத்திற்கு, முன்பின் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு (உடையார்பாளையம்) சென்று கடினமான காரியத்தை (உடும்பு பிடித்தல்) எப்படிச் செய்ய முடியும்?
சுருக்கமாக, உள்ளூரில் சிறிதளவு திறமை இல்லாத ஒருவர், வெளியூரில் பெரிய சாதனைகளைச் செய்ய முடியாது.
விளக்கம்:
"ஓணான்" என்பது சிறிய, எளிதில் பிடிக்கக்கூடிய உயிரினம்.
"உடும்பு" என்பது பெரிய, கடினமான உயிரினம்.
"உடையார்பாளையம்" என்பது ஒரு பல்லவர் சமஸ்தான அரசுப் பகுதி.
இந்த பழமொழி, தற்பெருமை பேசுபவர்களை அல்லது தங்களது அடிப்படைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்பவர்களைக் கேலி செய்யப் பயன்படுகிறது.
உதாரணங்கள்:
ஒருவர் தனது சொந்த ஊரில் சிறிய வியாபாரத்தை கூட வெற்றிகரமாக நடத்தத் திறனற்றவராக இருந்தால், அவர் ஒரு பெரிய நகரத்தில் பெரிய தொழிலை எப்படி நடத்த முடியும்?
ஒருவர் தனது சொந்த வீட்டில் சிறிய வேலைகளைக் கூடச் செய்யத் திறனற்றவராக இருந்தால், அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளை எப்படி ஏற்க முடியும்?
இந்த பழமொழி, கடினமான செயல்களைச் செய்வதற்கு முன், அடிப்படைத் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்த்துகிறது.
கலியுக சித்தர் திரு இராமலிங்கசுவாமி ஆலயம் அல்லது திரு குருநாதசுவாமி ஆலயம்
வட பத்ரகாளியம்மன் ஆலயம்
வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
காமன் ஆலயம்
கண்ணனூர் மகா மாரியம்மன் ஆலயம்
முக்கியத் திருவிழாக்கள்
திரு பயறணீநாதசுவாமி ஆலய பூஜைகள்-உற்சவங்கள்-சனிப்பெயர்ச்சி விழா-குருப்பெயர்ச்சி விழா-பிரதோச விழா-மஹா சிவராத்திரி விழா-பௌர்ணமி திருவலம்-அன்னாபிசேக விழா-தெப்பத்திருவிழா
திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலய தெப்பத்திருவிழா மற்றும் வானவேடிக்கை
திரு 'சித்தேரிக்கரை' திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
திரு பாலமுருகன் ஆலய காவடியாட்ட திருவிழா
'கலியுக சித்தர்' திரு இராமலிங்கசுவாமி ஆலய காவடியாட்ட திருவிழா
திரு வட பத்ரக்காளியம்மன் ஆலய உற்சவ திருவிழா
திரு பெரியநாயகி அம்மன் ஆலய மண்டல பூஜைகள்
திரு ஓம்சக்தி-ஆதிபராசக்தி ஆடி மாத மாபெரும் கஞ்சிக்கலயத் திருவிழா
ஆடி 18 கொண்டாட்டம் - ஆடி மாதம் அருகில் உள்ள ஊர்களில் , கிராமங்களில் இருந்து இங்கு வந்து புதுமண தம்பதிகள் கொண்டாடுவது வழக்கம்
போக்குவரத்து
விமானப் போக்குவரத்து
இவ்வூருக்கு அருகிலமைந்துள்ள திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
தொடருந்துப் போக்குவரத்து
அரியலூர் மற்றும் கும்பகோணம், விருத்தாச்சலம் ஆகியவை உடையார்பாளையத்திற்கு அருகில் உள்ள மூன்று முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு, தெற்குப்பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகள் உள்ளன.
மீனாட்சி இராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலவழி)
மீனாட்சி இராமசாமி வித்யாலயா பள்ளி (சிபிஎஸ்இ)
மீனாட்சி இராமசாமி மேனிலைப் பள்ளி(தமிழ்வழி)
கல்லூரிகள்
மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி
மீனாட்சி இராமசாமி மெரிட் கல்வியியல் கல்லூரி
அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
மருத்துவமனைகள்
ஜமீன்தார் தாலுக்கா அரசினர் மருத்துவமனை
நவஜீவன் மருத்துவமனை
முஸ்தபா மருத்துவமனை
ஜி.டி மருத்துவமனை
வி ஸ் பி மருத்துவமனை
கலைமகள் பல் மருத்துவமனை
இ.எஸ் பல் மருத்துவமனை
ஸ்மைல் பல் மருத்துவமனை
நகரம்
புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள காரணத்தினால் இது ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய தாலுக்கா'வாக இன்றளவும் இருப்பது உடையார்பாளையம் தாலுக்கா தான். இன்று பல தாலுக்கா'களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய தாலுக்கா'வாகவே கருதப்படுகிறது. பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் மாபெரும் வணிக நகராகவே இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூரை சேர்ந்த இராமசாமி முதலியார் இம்மாவட்டத்திலேயே முதன் முதலில் மீனாட்சி ராமசாமி என்ற பெயரில் கல்லூரிகளை உருவாக்கினார்.
சமயம்
மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
மொழியும் பண்பாடும்
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் இந்து சமய மக்களே.சிறுபான்மை சமூக கிறிஸ்தவ முஸ்லிம்களும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்... அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது அவரவர் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு.
பொருளாதாரம்
விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இங்கு முந்திரி, கடலை, கரும்பு, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. இங்கு முந்திரி, கடலை முக்கிய பயிர்கள் ஆகும்.பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கால்நடைகள் வளர்ப்பு பெரிதும் உதவுகிறது. இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.
பணப்பயிர்கள்
இந்நகரப் பகுதியில் முந்திரி,கடலை ஆகியன பணப் பயிர்களாக கருதப்படுகிறது
நகர நிர்வாகம்
உடையார்பாளையம் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். 12.4 சதுரகி.மீ பரப்பளவு கொண்ட இந்நகரம் 15 பெரிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சித்தலைவர் மற்றும் செயல்அலுவலரால் நிர்வகிக்கபடுகிறது. பல்வேறு தெருக்களை உடைய இந்நகரத்தில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது. உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக பேரூராட்சித் தலைவரும் நகரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர்.
பல்துறை அரசு அலுவலகங்கள்
உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம்
உடையார்பாளையம் முதன்மை அஞ்சல் நிலையம்
உடையார்பாளையம் கிளை அஞ்சல் நிலையம்
உடையார்பாளையம் உதவி மின்பொறியாளர் அலுவலகம்
உடையார்பாளையம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம்
உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம்
உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(மேற்கு)
உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(கிழக்கு)
உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
உடையார்பாளையம் வட்ட ஆய்வாளர் அலுவலகம்
உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம்
உடையார்பாளையம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம்
உடையார்பாளையம் கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
உடையார்பாளையம் காவல் நிலையம்
உடையார்பாளையம் கிளை நூலகம்
உடையார்பாளையம் ஆதித்திராவிடர் தனிவட்டாட்சியர் அலுவலகம்
உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம்
உடையார்பாளையம் பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்