உதய சந்திரிகா |
---|
 |
தேசியம் | இந்தியர் |
---|
பணி | நடிகை, தயாரிப்பாளர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1962-1985 (ஓய்வு பெற்றார்) |
---|
உதய சந்திரிகா (Udaya Chandrika) என்பவர் 1960 களின் நடுப்பகுதியிலிருந்து 1970 களின் நடுப்பகுதி வரை கன்னடத் திரைப்படங்களில் நடிகையாக இருந்தவராவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தொழில்
உதய சந்திரிகா 1966 இல் வெளியான கட்டாரி வீராவில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தப் படத்தில் டாக்டர் ராஜ்குமாரின் காதலியாக நடித்தார். கன்னடப் படங்களில் பல வேடங்களில் நடித்த இவர், 1979 ஆம் ஆண்டு கல்யாண் குமாரின் உடுகோரில் கடைசியாக நடித்தார்.
கன்னடத்தில் டாக்டர். ராஜ்குமார், கல்யாண் குமார், உதய்குமார், ராஜேஷ், விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், ரஜினிகாந்த் போன்ற இவரது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் நடித்தார். பிற மொழிகளில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், பிரேம் நசீர், கிருஷ்ணா ஆகியோருடன் பணியாற்றினார். [1]
இவர் தனது சந்திரிகா பிலிம்ஸ் பதாகையின் கீழ் விஷ்ணுவர்தன் நடித்த அசத்யா அலியா , சங்கர் நாக் நடித்த கிலாடி அலியா ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்தார்.
தில்லானா மோகனாம்பாள், கட்டாரி வீரா, தூமகேது, பூபதி ரங்கா, அஞ்சுசுந்தரிகள், பட்டுக்குண்டே லக்ஷா போன்றவை இவரது புகழ்பெற்ற படங்களாகும்.
திரைப்படவியல்
ஆண்டு |
படம் |
உடன் நடித்தவர் |
மொழி |
குறிப்புகள்
|
1962 |
தெய்வத்தின் தெய்வம் |
|
தமிழ் |
|
1965 |
ஆனந்தி |
|
தமிழ் |
|
என்னதான் முடிவு |
|
தமிழ் |
|
1966 |
அவன் பித்தனா |
|
தமிழ் |
|
பெரிய மனிதன் |
|
தமிழ் |
|
கட்டாரி வீரா |
ராஜ்குமார் |
கன்னடம் |
|
1967 |
ராஜாத்தி |
|
தமிழ் |
|
மாடிவீட்டு மாப்பிள்ளை |
|
தமிழ் |
|
மனாசித்தரே மார்கா |
ராஜசங்கர் |
கன்னடம் |
|
1968 |
தில்லானா மோகனாம்பாள் |
|
தமிழ் |
|
பாக்ய தேவதே |
ராஜ்குமார் |
கன்னடம் |
|
தூமகேது |
ராஜ்குமார் |
கன்னடம் |
|
சின்னாரி புட்டண்ணா |
ரமேஷ் |
கன்னடம் |
|
அஞ்சு சுந்தரிகள் |
|
மலையாளம் |
|
இன்ஸ்பெக்டர் |
|
மலையாளம் |
|
1969 |
மல்லம்மன பவடா |
ராஜ்குமார், சரோஜாதேவி |
கன்னடம் |
|
சுவர்ண பூமி |
ராஜேஷ், சுதர்சன் |
கன்னடம் |
|
1970 |
பெண் தெய்வம் |
|
தமிழ் |
|
பாலே கிலாடி |
ஸ்ரீநாத் |
கன்னடம் |
|
பூபதி ரங்கா |
ராஜ்குமார் |
கன்னடம் |
|
மராத்யு பஞ்சரதல்லி சிஐடி 555 |
உதயகுமார், ஸ்ரீநாத் |
கன்னடம் |
|
இஷ்க் பர் ஜோர் நஹின் |
|
இந்தி |
சிறப்புத் தோற்றம்
|
1971 |
ஒரு தாய் மக்கள் |
|
தமிழ் |
|
ஹென்னு ஹொன்னு மண்ணு |
ராஜேஷ் |
கன்னடம் |
|
பெட்டத குட்டா |
ராஜேஷ் |
கன்னடம் |
|
1972 |
சீதே அல்லா சாவித்திரி |
விஷ்ணுவர்தன் |
கன்னடம் |
|
உத்தர தட்சிணா |
ரமேஷ், கல்பனா |
கன்னடம் |
|
1973 |
எங்கள் தாய் |
|
தமிழ் |
|
பெட்டடத பைரவா |
உதயகுமார் |
கன்னடம் |
|
1974 |
சுவாதி நட்சத்திரம் |
|
தமிழ் |
|
1975 |
பிரியாவிடை |
|
தமிழ் |
|
ஆஷா சௌதா |
உதயகுமார், ராஜேஷ், கல்பனா |
கன்னடம் |
|
பார்யா இல்லாத ராத்திரி |
|
மலையாளம் |
|
1976 |
தசாவதாரம் |
|
தமிழ் |
|
படுகு பங்காரவைத்து |
ராஜேஷ், ஸ்ரீநாத், ஜெயந்தி, மஞ்சுளா |
கன்னடம் |
|
பாலு ஜெனு |
கங்காதர், ஆரத்தி, இரசினிகாந்து |
கன்னடம் |
|
மக்கள பாக்யா |
|
கன்னடம் |
சிறப்புத் தோற்றம்
|
கட்கிச்சு |
ராம்கோபால் |
கன்னடம் |
|
நம்ம ஊர தேவரு |
ராஜேஷ் |
கன்னடம் |
|
1977 |
கர்தவ்யதா கரே |
யாஷ்ராஜ், பி. வி. இராதா |
கன்னடம் |
|
1979 |
உடுகோர் |
கல்யாண் குமார் |
கன்னடம் |
|
அசாத்தியா அலியா |
|
கன்னடம் |
தயாரிப்பாளர்
|
1985 |
கில்லாடி அலியா |
கல்யாண் குமார், சங்கர் நாக் |
கன்னடம் |
|
மேற்கோள்கள்