தெய்வத்தின் தெய்வம்
தெய்வத்தின் தெய்வம் 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, குமாரி மணிமாலா, எஸ். வி. ரங்கா ராவ், எம். வி. ராஜம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆனந்த விகடன் இதழில் முன்னர் வெளியான பிலஹரி எழுதிய ஜடம் என்ற சிறுகதையைத் தழுவி இத்திரைப்படக் கதை அமைக்கப்பட்டிருந்தது.[2] திரைக்கதைச் சுருக்கம்ஒரு வசதியான மனிதருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் கண்மணி மேற்படிப்புக்காகச் சென்னை செல்கிறாள். அங்கே ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த அன்னம் என்ற பெண்ணைச் சந்தித்து அவளுடன் நட்புக் கொள்கிறாள். விடுமுறையின் போது அன்னத்தைத் தன் வீட்டிற்குக் கண்மணி அழைத்து வருகிறாள். வந்த இடத்தில் அன்னத்தின் மீது கண்மணியின் சகோதரன் காதல் கொள்கிறான். அவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திருமணத்தின் பின் கண்மணியின் சகோதரன் இறந்து விடுகிறான். அன்னம் விதவையாகிறாள். சிறிது காலத்தில் கண்மணி பாபுவைத் திருமணம் செய்கிறாள். ஆனால் அவர்கள் மணவாழ்வு கசந்து போகிறது. பாபு விவாகரத்துப் பெற முயலுகிறான். ஆனால் கண்மணி அதற்குச் சம்மதிக்கவில்லை. விதவையான அன்னத்தை பாபுவின் தம்பிக்குத் திருமணம் செய்து வைக்க கண்மணி முயற்சி செய்கிறாள். இந்தச் சிக்கல்கள் எப்படித் தீர்வாகின்றன என்பதே மீதிக் கதையாகும்.[2] நடிகர்கள்
தயாரிப்பு குழு
பாடல்கள்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். இதுவே அவர் இசையமைத்த இறுதிப்படமாகும். இதன்பின் அவர் அருணகிரிநாதர் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் அவர் மாரடைப்பால் இறந்து போக டி. ஆர். பாப்பா அந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்தார்.[4]
சான்றாதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia