உத்தமி பெற்ற ரத்தினம்
உத்தமி பெற்ற ரத்தினம் 1960-ஆம் ஆன்டில் வெளிவந்த தமிழ், குடும்ப, நாடகத் திரைப்படம் ஆகும். எம். ஏ. திருமுகம் இதனை இயக்கியிருந்தார்.[1] திரைக்கதை, வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, சி. சலபதி ராவ் இசையமைத்திருந்தார். கே. பாலாஜி, மாலினி, ப. கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். குலதெய்வம் ராஜகோபால், மனோரமா நகைச்சுவை வேடங்களில் நடித்தனர்.[2] திரைக்கதைகதை பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையிலான பிரச்சினைகளைக் கூறுகிறது. பணக்காரனின் மகள் ஏழைப் பையனைக் காதலிக்கிறாள், அவனது தந்தை பணக்காரனிடம் வேலை செய்கிறான்.[1] நடிப்பு
பாடல்கள்தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி சுப்பு ஆறுமுகம் ஆகியோர் பாடல்களை இயற்ற டி. சலபதி ராவ் இசையமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, பி. லீலா, பி. சுசீலா, ஜிக்கி, எஸ். ஜானகி ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.[3]
வரவேற்புமுக்கிய நடிகர்கள், சிறந்த வசனம், சிறந்த பாடல்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழக்கமான திரைக்கதை காரணமாக இத்திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia