உருசிய தேசிய காற்பந்து அணி
உருசிய தேசிய காற்பந்து அணி (Russia national football team, உருசியம்: национа́льная сбо́рная Росси́и по футбо́лу) பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் உருசியாவின் சார்பில் பங்கேற்கும் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணியை உருசிய காற்பந்து ஒன்றியம் (உருசியம்: Российский Футбольный Союз) நிருவகிக்கிறது. உருசியா ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. 1960 இல் நடைபெற்ற முதலாவது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் சோவியத் அணியாகப் பங்குபற்றி ஐரோப்பியக் கோப்பையை வென்றது.[2] உருசிய அணி (1991 சோவியத் பிளவின் பின்னர்) மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது. 1994, 2002, 2014); 2018-இல் உலகக்கோப்பையை நடத்தும் நாடாக விளையாடத் தகுதி பெற்று, காலிறுதிப் போட்டி வரை விளையாடியது. நான்கு முறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது (1996, 2004, 2008 மற்றும் 2012). யூரோ 2008- இலேயே முதன்முறையாக குழுநிலையைத் தாண்டி அடுத்த நிலைக்குச் சென்றனர். உருசிய அணி தனது உள்ளக விளையாட்டுகளை மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி அரங்கில் விளையாடுகிறது. இதன் தற்போதைய பயிற்சியாளர் இசுதானிசுலாவு செர்சேசொவ் ஆவார். குறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia