சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி
சோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி (Soviet Union national football team; உருசியம்: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу, sbornaya Sovyetskogo Soyuza po futbolu), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு, உருசியா தேசிய காற்பந்து அணியாகத் தொடர்கிறது;[1] ஃபிஃபாவின் விதிமுறைகளின்படி, சோவியத் யூனியன் அணியின் செயல்பாடுகள் உருசிய கால்பந்து அணியின் சேர்க்கப்பட்டன. சோவியத் யூனியன் அணியானது, உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிக்கு, 1974 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தகுதிபெறாமல் இருந்திருக்கிறது. மொத்தமாக, ஏழுமுறை உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது. 1966 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்றதே இவ்வணியின் சிறப்பான செயல்பாடாகும்; இதில், அரையிறுதியில் மேற்கு செருமனி அணியிடம் 2-1 என்ற இலக்குக் கணக்கில் தோல்வியுற்றது. சோவியத் யூனியன், ஐந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது. முதன்முதலில் நடத்தப்பட்ட 1960 யூரோவின் இறுதிப் போட்டியில் யூகோஸ்லாவிய அணியை 2-1 என்ற இலக்குக் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. மேலும், 1964, 1972 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றது; 1968-இல் நான்காம் இடம்பெற்றது. சோவியத் யூனியன், கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றது; 1956 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றது. குறிப்புகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia