ரோடியம்(III) அயோடைடு
உரோடியம்(III) அயோடைடு (Rhodium(III) iodide) RhI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது.[1] தயாரிப்புநீரிய பொட்ட்டாசியம் அயோடைடுடன் ரோடியம்(III) புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் உரோடியம்(III) அயோடைடு உருவாகிறது.[1]
கட்டமைப்புஅலுமினியம் குளோரைடு (AlCl3), இட்ரியம்(III) குளோரைடு (YCl3) போன்ற சேர்மங்களின் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட அதே படிக கட்டமைப்பையே உரோடியம்(III) அயோடைடும் ஏற்கிறது. கனசதுர நெருக்கப் பொதிவு அயோடைடு அயனிகளும். ரோடியம் அயனிகளும் எண்முக மூலக்கூற்று வடிவத்தின் இடைவெளிகளில் நிரம்பி உருவாகும் அடுக்குகளை இக்கட்டமைப்பு கொண்டுள்ளது. [2] வினைகள்நீரிலி வடிவத்தில் மட்டுமே உரோடியம்(III) அயோடைடு காணப்படுகிறது. நீரேற்றுகளாக இது உருவாவதில்லை.[1] தொடர்புடைய [RhI6]3− என்ற எதிர்மின் அயனியும்[1] உருவாகாது என முன்னதாகக் கூறப்பட்டது. ஆனால் ரோடியம்(III) குளோரைடை (RhCl3·3H2O) ஐதரயோடிக் அமிலம் மற்றும் பிப்பெரசீன் ஆகியவற்றாலான அடுக்கின் வழியாக விரவல் வினைக்கு உட்படுத்தி பின்னர் தயாரிக்கப்பட்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia