உருபீடியம் ஆக்சலேட்டு (Rubidium oxalate) என்பது Rb2C2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தினுடைய உருபீடியம் உப்பான இதில் ருபீடியம் நேர்மின் அயனியும் (Rb+) ஆக்சலேட்டு எதிர்மின் அயனியும் (C2O2−4 சேர்ந்துள்ளன. உருபீடியம் ஆக்சலேட்டு பெரும்பாலும் ஒற்றை நீரேற்றாக(Rb2C2O4·H2O) உருவாகிறது.
ஒரு நீரிய கரைசலில் இருந்து, ரூபிடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைநீரேற்றாக ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் படிகமாக உருவாகிறது.[3] பொட்டாசியம் ஆக்சலேட்டு ஒற்றைநீரேற்றுடன் K2C2O4·H2O ஒத்த உருவமைப்பைக் கொண்டுள்ளது.[4]அறை வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் (Rb2C2O4) இரண்டு நீரிலி வடிவங்கள் அறியப்படுகின்றன. சீசியம் ஆக்சலேட்டுடன் (Cs2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட ஒற்றைச்சரிவச்சு வடிவம், பொட்டாசியம் ஆக்சலேட்டுடன் (K2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட செஞ்சாய்சதுரப் படிகவடிவம் என்பன இவ்விரண்டு வடிவங்களாகும்.[5] புதியதாகத் தயாரிக்கப்படும் நீரிலி வடிவ ருபீடியம் ஆக்சலேட்டு ஆரம்பத்தில் முக்கியமாக ஒற்றைச்சரிவச்சு வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இது மெதுவாக செஞ்சாய்சதுர படிகவடிவ உருபீடியம் ஆக்சலேட்டாக மாறுகிறது.[6] 2004 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு உயர்வெப்ப உருபீடியம் ஆக்சலேட்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7]
உருபீடியம் ஆக்சலேட்டின் வெவ்வேறு வடிவ படிகத்தரவுகள்
உருபீடியம் ஆக்சலேட்டு படிகத்தின் உருவாதல் வெப்பம் 1325.0 ± 8.1 கிலோயூல்/மோல் ஆகும்.[9]
507-527 °செல்சியசு (945-981 °பாரங்கீட்டு; 780-800 கெல்வின்) வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் சிதைவு நடைபெற்று கார்பன் மோனாக்சைடும் பின்னர் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
Rb2C2O4 → Rb2CO3 + CO↑
Rb2CO3 → Rb2O + CO2↑
Rb2O → 4 Rb + O2↑
நடுநிலையான உருபீடியம் ஆக்சலேட்டுடன் Rb2C2O4 கூடுதலாக, RbHC2O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் அமில உப்பு ருபீடியம் ஐதரசன் ஆக்சலேட்டும் அறியப்படுகிறது.[10] இது பொட்டாசியம் ஐதரசன் ஆக்சலேட்டுடன் KHC2O4 ஒத்த அமைப்பைக் கொண்டு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் உள்ளது.[11] இதைதவிர இருநீரேற்று சேர்மமாக இருக்கும் RbHC2O4·H2C2O4 சேர்மமும் அறியப்படுகிறது. இது 18 °செல்சியசு வெப்பநிலையில் 2.125 கி/செ.மீ3 அடர்த்தியும், 21 ° செல்சியசு வெப்பநிலையில் 21 கி/லிட்டர் கரைதிறன் கொண்டது.
ஐதரசன் பெராக்சைடில் கரைக்கப்பட்ட கரைசலை ஆவியாக்கும்போது, உருபீடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O2 என்ற வாய்ப்பாடு கொண்ட ஒற்றைபெர்நீரேற்றாக உருவாகிறது. இது காற்றில் ஒப்பீட்டளவில் நிலையாக இருக்கும் ஒற்றைச் சரிவச்சுப் படிகங்களை உருவாக்குகிறது.[12]
உருபீடியம் ஆக்சலேட்டு ஐதரசன் புளோரைடுடன் வினைபுரிந்து ஐதரோபுளோரிடேட்டு என்ற உப்பாக உருவாகிறது.:[13]
↑Robert E. Dinnebier, Sascha Vensky, Martin Jansen, Jonathan C. Hanson (2005-02-04), "Crystal Structures and Topological Aspects of the High-Temperature Phases and Decomposition Products of the Alkali-Metal Oxalates M2[C2O4] (M=K, Rb, Cs)", Chemistry - A European Journal, vol. 11, no. 4, pp. 1119–1129, doi:10.1002/chem.200400616, PMID15624128{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Takuya Echigo, Mitsuyoshi Kimata (November 2006), "The common role of water molecule and lone electron pair as a bond-valence mediator in oxalate complexes : the crystal structures of Rb2(C2O4) · H2O and Tl2(C2O4)", Zeitschrift für Kristallographie, vol. 221, no. 12, pp. 762–769, Bibcode:2006ZK....221..762E, doi:10.1524/zkri.2006.221.12.762, S2CID98482669