உருபீடியம் மூவயோடைடு
தயாரிப்புஉருபீடியம் அயோடைடுடன் அயோடின் சேர்ந்த நீர்த்த கரைசலை சூடாக்குவதன் மூலம் உருபீடியம் மூவயோடைடு உருவாகும்.:[1]
பண்புகள்உருபீடியம் மூவயோடைடு செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது. Pnma என்ற இடக்குழுவில் அலகு செல் அளவுருக்கள் a = 1090.8 பைக்கோமீட்டர், b = 665.5 a = 1090.8 பைக்கோமீட்டர், c = 971.1 a = 1090.8 பைக்கோமீட்டர் என்ற அலகு செல் அளவுருக்கள் கொண்டு சீசியம் மூவயோடைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பில் படிகமாகிறது.[2]270 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது உருபீடியம் மூவயோடைடு உருபீடியம் அயோடைடு மற்றும் தனிம அயோடினாக சிதைவடைகிறது.[1] மேலும் உருபீடியம் மூவயோடைடு எத்தனாலில் கரையக்கூடியதாகவும் ஈதரில் சிதையக்கூடியதாகவும் உள்ளது.[1] வினைகள்உருபீடியம் மூவயோடைடு அயோடினுடன் மேலும் வினைபுரிந்து RbI7 மற்றும் RbI9 போன்ற சேர்மங்களை உருவாக்குமென நீண்ட காலமாக நம்பப்பட்டது.[3] ஆனால் இவ்வினைகள் சமீபத்திய ஆய்வுகளால் மறுக்கப்பட்டன.[4][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia