உருபீடியம் செருமேனியம் அயோடைடு
உருபீடியம் செருமேனியம் அயோடைடு (Rubidium germanium iodide) என்பது RbGeI3என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியம் மற்றும் செருமேனியம் ஆகிய தனிமங்களின் மும்மை ஆலைடு சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. ஒளிமின்னழுத்த பயன்பாடுகளுக்கான நச்சுத்தன்மை வாய்ந்த CH3NH3PbI3 சேர்மத்திற்கு இது ஒரு சாத்தியமான இணையாகக் கருதப்படுகிறது.[1] தயாரிப்புசெருமேனியம்(II) ஐதராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட உருபீடியம் அயோடைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் உருபீடியம் செருமேனியம் அயோடைடை தயாரிக்கலாம்.:[2]
பண்புகள்உருபீடியம் செருமேனியம் அயோடைடு பல்வேறு சிதைந்த பெரோவ்சிகைட்டு போன்ற கட்டமைப்புகளுடன் பல்லுருவங்களில் காணப்படுகிறது. இது Ge2+ அயனியின் மையத்தில் உள்ள "பிணைப்பு அல்லாத" இணை எலக்ட்ரான்களின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.[3] அறை வெப்பநிலையில், உருபீடியம் செருமேனியம் அயோடைடு கருப்பு நிறத்தில் கனசதுர பெரோவ்சிகைட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. -29 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் -52 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையே கருப்பு செஞ்சாய் சதுர வடிவமும்; -52 °செல்சியசு வெப்பநிலை மற்றும் -92 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையே போர்டாக்சு-சிவப்பு நேர்சாய்சதுர பெரோவ்சிகைட்டு வடிவமும்; மற்றும் -92 ° செல்சியசு வெப்பநிலைக்குக் கீழே எலுமிச்சை-மஞ்சள் நேர்சாய்சதுர வடிவமும் கொண்ட பண்புகளை உருபீடியம் செருமேனியம் அயோடைடு வெளிப்படுத்துகிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia