பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு மற்றும் உருபீபிடியம் குளோரைடு ஆகியவை ஒன்றாகச் சேற்ந்து வினை புரிவதால் உருபீபிடியம் பெர்மாங்கனேட்டு உருவாகிறது.:[4][5]
RbCl + KMnO4 -> KCl + RbMnO4 ↓
இயற்பியல் பண்புகள்
7 °செல்சியசு வெப்பநிலையில் உருபீபிடியம் பெர்மாங்கனேட்டு நீரில் 6.03 கி/லி கரைதிறன் கொண்டு கரைகிறது.[3] 19 °செல்சியசு வெப்பநிலையில் 10.6 கி/லி என்ற கரைதிறனும்[2] , 60 °செல்சியசு வெப்பநிலையில் 46.8 கி/லி என்ற கரைதிறனையும் இது கொண்டுள்ளது.[6]சீசியம் பெர்மாங்கனேட்டு, அம்மோனியம் பெர்மாங்கனேட்டு மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு போல இதன் படிக அமைப்பும் செஞ்சாய் சதுரப் படிக அமைப்பு ஆகும்.[1]
வேதியியல் பண்புகள்
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைப் போலவே, உருபீடியம் பெர்மாங்கனேட்டும் இரண்டு-படி நிலைகளில் சிதைவடைந்து உருபீடியம் மாங்கனேட் இடைநிலைகளை உருவாக்குகிறது. மாங்கனீசு டை ஆக்சைடு, உருபீடியம் ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாக உடைகிறது.[4] சிதைவு வெப்பநிலை 200 முதல் 300 °செல்சியசு வெப்பநிலை வரை உள்ளது.[7] வெளியேறும் ஆக்சிசன் இத்தயாரிப்பில் 8% நிறை இழப்பை ஏற்படுத்துகிறது.[7]
10RbMnO4 → 3Rb2MnO4 + 7MnO2 + 2Rb2O + 6O2 ↑
2Rb2MnO4 → 2MnO2 + 2Rb2O + O2 ↑
ஒட்டுமொத்த வினை:
4RbMnO4 → 4MnO2 + 2Rb2O + 3O2 ↑
பயன்கள்
தரப் பகுப்பாய்வில், பெர்குளோரேட்டு அயனிகளைக் கண்டறிய உருபீடியம் பெர்மாங்கனேட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ரூபிடியம் நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு ஆகியவற்றிலிருந்து ஓர் இடைநிலையாக உற்பத்தி செய்யப்படுகிறது. RbClO4·RbMnO4 கலப்பு படிகமாக இருக்கும் பெர்குளோரேட்டு அயனிகளுடன் வீழ்படிகிறது.[8]