உரோமைச் சமயக் குற்ற விசாரணை![]() உரோமைக் குற்ற விசாரணை, இதனை முறையாக ரோமன் மற்றும் உலகாளவிய திரிபுக் கொள்கை விசாரணையின் உயர் புனித சபை என்பர். இந்த கிறித்துவச் சமயக் குற்ற விசாரணை 1542 முதல் 1650 முடிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சிப் பீடத்தால் நிறுவப்பட்ட திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.[1] இது பரந்த அளவில் கிறித்துவத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்கும் அமைப்பாகும். உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபைச் சட்டம் மற்றும் கோட்பாட்டின்படி குற்றங்களின் வரிசை, கத்தோலிக்க மத வாழ்க்கை அல்லது மாற்று மத அல்லது மதச்சார்பற்ற நம்பிக்கைகள் தொடர்பானது. இக்குற்ற விசாரணை சபை, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் மூன்றாம் பவுல் 1542 இல் நிறுவினார். எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மற்றும் போர்த்துகீசிய குற்ற விசாரணை ஆகியவற்றுடன் பரந்த கத்தோலிக்க விசாரணையின் மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். செயல்பாடுகள்போப்பாண்டவர் மூன்றாம் பவுலுடன் ஒத்துழைத்த நாடுகளில் கத்தோலிக்க மரபுவழியிலிருந்து விலகியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் கத்தோலிக்க சமயக் குற்றங்கள் தொடர்பாக கத்தோலிக்க அரசுகள் முறையான நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தேவாலயத் தீர்ப்புகளை பராமரித்து செயல்படுத்துவது இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாகும். கத்தோலிக்கத்திற்கு எதிரான திரிபுக் கொள்கைகளை பரப்புவோர் மீது விசாரணை செய்யும் அமைப்பாகும்.[2]போப்பாண்டவர் மூன்றாம் லூசியஸ் மதகுருமார்கள் மற்றும் சாமானியர்கள் மீது அபராதம் விதித்தார் மற்றும் ஆயர்களால் முறையான விசாரணையை நிறுவினார். திரிபுக் கொள்கைகள் கொண்ட மதகுருமார்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள், சாமானியர்கள் இழிவானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள், வணிகர்காள் வணிகம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை உயில் எழுதி வைக்கவோ அல்லது பரம்பரையாக அனுபவித்துக் கொள்ள அனுமதி இல்லை. திரிபு கொள்கை கொண்ட ஒரு தலைவரை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் போப்பாண்டவர் திரிபு கொள்கைகளைக் கொண்ட தனது குடிமக்களின் நிலங்களை பறிமுதல் செய்து அதனை கத்தோலிக்கர்களுக்கு வழங்கினார்.[3] ரோமை கத்தோலிக்கத் திருச்சபை திரிபுக் கொள்கை விசாரணையின் நிறுவன அமைப்பு இடைக்கால விசாரணையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. பொதுவாக திருச்சபையின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதற்கு போப்பாண்டவர் ஒரு கர்தினாலை நியமித்தார். வரலாற்று இலக்கியங்களில் பெரிய விசாரணையாளர் என்று அடிக்கடி குறிப்பிடப்பட்டாலும், எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையின் முறையாக நியமிக்கப்பட்ட பெரிய விசாரணையாளர்களை விட இந்த பாத்திரம் கணிசமாக வேறுபட்டது. பொதுவாக சபையின் உறுப்பினர்களாக இருந்த மற்ற பத்து கர்தினால்கள் மற்றும் ஒரு பிரேட் மற்றும் இரண்டு உதவியாளர்கள் அனைவரும் ஆட்சிக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். புனித கத்தோலிக்க திருச்சபை அலுவலகம் பன்னாட்டு ஆலோசகர்களைக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கும் கத்தோலிக்க இறையியல் சட்டங்கள் மற்றும் நியதிச் சட்டத்தின் அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் சபை மற்றும் தீர்ப்பாயங்களின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினர். வரலாறு16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக ஐரோப்பாவில் கிறித்துவத்தில் திரிபுக் கொள்கைகள் கொண்ட சீர்திருத்தத் திருச்சபை இயக்கம் வேகமாகப் பரவியது. இதனை தடுக்க கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு எதிராக 1542இல் போப்பாண்டவர் திரிபுக் கொள்கை விசாரணை அமைப்பை நிறுவினார். 1478இல் நிறுவப்பட்ட எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையை விட குறைவான விவகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.[4] 1588 இல்[5] போப்பாண்டவர் ஐந்தாம் சிக்ஸ்டஸ் பன்னாட்டு அளவில் 15 திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றங்கள் நிறுவினார். 1908ஆம் ஆண்டில், இந்த சபையானது புனித அலுவலகத்தின் உச்ச புனித சபை என மறுபெயரிடப்பட்டது. 1965ஆம் ஆண்டில் அது விசுவாசக் கோட்பாட்டிற்கான சபை என மறுபெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் இது மீண்டும் விசுவாசக் கோட்பாட்டிற்கான தலைமைச் சபை என மறுபெயரிடப்பட்டது.[6] ரோமானிய திரிபுக் கொள்கை விசாரணை சபை முதலில் இத்தாலியில் சீர்திருத்தத் திருச்சபையினரின் பரவலை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனம் அதன் அசல் நோக்கத்தையும், தீர்ப்பாயங்களின் முறையையும் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது. ஒருங்கிணைக்கப்படுவதற்கு முந்தைய இத்தாலிய அரசுகள் உள்ளூர் திரிபுக் கொள்கை விசாரணைகளை நசுக்கத் தொடங்கி, விசாரணையை திறம்பட நீக்கியது. துரோக குற்றங்களை விசாரிக்க கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. உரோமைக் கத்தோலிக்க திருச்சபையின் திரிபுக் கொள்கை விசாரணைகள்நிக்கோலாஸ் கோப்பர்நிக்கஸ்நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1543ஆம் ஆண்டில் தனது நூலில், பூமியை விட சூரியனே பிரபஞ்சத்தின் மையத்தில் உள்ளதாக அறிவித்தார். இந்த புத்தகத்தை நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் வானியலில் ஆர்வர் கொண்ட போப் மூன்றாம் பாலுக்கு அர்ப்பணித்தார். 1616ஆம் ஆண்டில், ரோமானிய திரிபுக் கொள்கை விசாரணையின் ஆலோசகர்கள் சூரியன் பிரபஞ்சத்தின் மையத்தில் உள்ளது மற்றும் பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது என்ற நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் கருத்து "முட்டாள்தனமானது மற்றும் கிறித்துவ தத்துவத்தில் அபத்தமானது" மற்றும் முதலாவது மதவெறியுடன் கூடிய திரிபுக் கொள்கை என்று தீர்ப்பளித்தது. மேலும் கிறிஸ்தவ நம்பிக்கையில் பிழையானது எனக்குற்றம் சாட்டியது.[note 1][7] இந்த விசாரணையின் முடிவால் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் நூல் தடை செய்யப்பட்ட நூல் அட்டவணையில் வைப்பதற்கு வழிவகுத்தது. கலீலியோகலீலியோ கலிலி சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[8] பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு 1642 ஜனவரி 8 இல் தன் 77 ஆம் அகவையில் இறந்தார். கலீலியோ கலிலி நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் கோட்பாடுகளைத் திருத்தினார் மற்றும் 1615இல் சூரிய மையவாதம் குறித்த அவரது கருத்துக்களுக்காக போற்றப்பட்டார். ரோமானிய திரிபுக் கொள்கை விசாரணை அவரது கோட்பாடு ஒரு சாத்தியமாக மட்டுமே ஆதரிக்கப்பட முடியுமே தவிர, ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இல்லை என்று முடிவு செய்தது.[9] சூனியம் மற்றும் மாந்திரீக குற்றச்சாட்டுகள்ஐரோப்பா முழுவதும் கத்தோலிக்கத் திருச்சபை வழிபாட்டிற்கு எதிரான நம்பிக்கை கொண்ட, நாட்டுப்புற வழிபாடுகளில் நம்பிக்கைகளில் தொடர்புடைய பெண்களை பேய் ஓட்டுபவர்கள், சூனியக்காரிகள் மற்றும் மாந்திரீகம் செய்பவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டு உரோமைத் திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு பதிவிட்டு, பெண்கள் வேட்டையாட்டப்பட்டனர்.[10][11][12][13][14] 100,000 முதல் 9,000,000 வரையான சூனியக்காரிகளுக்கு மரணதண்டனை விதிக்கபட்டது. பின்னர் தூக்கிலிடப்பட்ட சூனியக்க்காரப் பெண்களின் எண்ணிக்கை 45,000 முதல் 60,000 வரை வெகுவாகக் குறைக்கப்பட்டது. இத்தாலி மற்றும் மால்டாவில் சமயக் குற்ற விசாரணை1542இல் இத்தாலியில் சமயக் குற்ற விசாரணையில் 51,000 முதல் 75,000 வரையிலான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 1250 பேருக்கு கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக சமயக் குற்றம் இழைத்தவர்கள் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.[15] மால்ட்டாவில் சமயக் குற்ற விசாரணை (1561 முதல் 1798 வரை) பொதுவாக மென்மையாக நடத்தப்பட்டது.[16] இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia