உறுப்பு மாற்று
உறுப்பு மாற்று (Organ transplantation) அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பழுதுபட்ட உடல் உறுப்புகளுக்கு பதிலாக உயிருடன் இருக்கும் அல்லது இறந்த மனிதனிடமிருந்தோ அல்லது விலங்கிடமிருந்தோ (உறுப்புதானம் செய்வோரிடமிருந்து) பெறப்பட்ட உறுப்புகளைக்கொண்டு மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை முறையாகும்.இதன் மூலம் பழுதுபட்ட உறுப்புகளை மாற்றி உயிரைக்காக்கவோ அல்லது வாழ்நாளை நீட்டிக்கவோ இயலும். தானம் செய்யத்தக்க உறுப்புக்கள்மனித உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் தானம் செய்யத்தக்கவை அல்ல. சிலவற்றை மட்டுமே தானம் செய்ய இயலும். இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், குடல், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கருவிழி, தோல், இதயவால்வுகள், இரத்தக்குழாய்கள் முதலிய உறுப்புகள் தானம் செய்யத்தக்கவை வகைகள்தன்னுறுப்பு மாற்றுஇது தன்னிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகளை வைத்தே செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையாகும்.எடுத்துகாட்டாக சிதிலமடைந்த சதைக்கு பதிலாக வளமிக்க சதைப்பகுதியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வைப்பதைக் கூறலாம். வேற்றுருப்பு மாற்றுஇது தன் இனத்திலேயே வேறொருவரிடமிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும். அயலுருப்பு மாற்றுஇது வேற்று இனத்திலிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும். இரட்டையுருப்பு மாற்றுஇது இரட்டையருள் ஒருவரிலிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு மற்றொருவரின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும். பகுவுருப்பு மாற்றுஇது ஒருவரிலிருந்து பெறப்படும் உறுப்புகளை பகுத்து இருவரின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும். இது சில சமயங்களில் முழு பலனை அளிக்காது. வளர்ப்புறுப்பு மாற்றுஇது நவீன கால சிகிச்சை முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான உறுப்புகளை நம் உடலிலேயே வளர வைத்து பின் அதையே நம் உடலிலுள்ள பழுதடைந்த உறுப்புக்கு பதிலாக மாற்றிக்கொள்ளலாம். வளர்ப்புறுப்பு மாற்று அடிப்படை தத்துவம்நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்புகம் நாம் கருவிலிருக்கும் பொழுது வளர்கிறது.அனைத்து உறுப்புகளுக்கும் செல்களே அடிப்படை.குறிப்பிட்ட செல்கள் குறிப்பிட்ட உறுப்புகளாக உருவெடுக்க பணிக்கப்படுகிறது.எந்த செல்கள் எந்த உறுப்புக்களாக உருவெடுக்கவேண்டுமென்பதை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.எனவே தற்பொழுது நமக்கு இதயம் தேவையெனில் நம் தோல் பகுதிகளை இதயமாக உறுமாறப் பணிக்கலாம். உறுப்பு தானம் செய்வோரின் வகைகள்தாமாக முன்வரும் உறவுகள்இரத்த சம்பந்தமுள்ள உறவுகள் அல்லது இரத்த சம்பந்தமில்லாத நண்பர்கள் முதலியோர் அன்பினால் உந்தப்பட்டு அளிக்கும் தானமாகும். பணத்திற்காக தானம் செய்வோர்வறுமைப்பிடியிலுள்ளோர் பணத்திற்காக அளிக்கும் தானமாகும். மனிதநேயமுடையோர்இரத்த உறவோ அல்லது நட்போ இல்லாத பட்சத்திலும் சக மனிதர் மீது அன்பு கொண்டு மனிதநேயத்தோடு அளிக்கும் தானமாகும். சூழ்நிலைக்கைதிகள்இது ஒருவருக்கு தெரிந்தோ தெரியாமலோ வற்புருத்தியோ மிரட்டியோ பெறப்படும் தானமாகும். உறுப்பு திருட்டுபல நாடுகளில் உறுப்புகளுக்காக மனிதர்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றனர்,சில சமயங்களில் கொல்லப்படுகின்றனர்.சில மருத்துவமனைகளில் உயிருடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சம்மதம் இன்றி அவர்களுக்கு தெரியாமலேயே உறுப்புகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.சில சமயங்களில் இறந்தவரின் உடம்பிலிருந்து கூட உறுப்புகள் திருடப்படுகிறது. சிகிச்சையின் சிக்கல்கள்முதலில் தானம் செய்வோரிடமிருந்து பெறப்படும் உறுப்புக்களை பெறுபவரின் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் பெறுபவரின் உடம்பின் எதிர்ப்பு சக்தி மாற்று உறுப்பினை ஏற்றுக்கொள்ளாது.அப்படி ஏற்காத பட்சத்தில் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவடையும். இவற்றையும் பார்க்கவும்உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia