எங்கள் தங்கம்
எங்கள் தங்கம் (Engal Thangam) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார்.[1][2][3] இது 9 அக்டோபர் 1970 இல் வெளியிடப்பட்டது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் மூன்றைப் பெற்று வெற்றியும் ஈட்டியது. கதைசுமையுந்து ஓட்டுநரான தங்கத்துக்கு சுமதி என்ற பார்வையற்ற தங்கை இருக்கிறாள். தங்கத்தின் பால்ய நண்பனான மூர்த்தி குற்றப் பின்னணி உள்ளவர். அவர் சுமதியை திருமணம் செய்து கொள்கிறார். மூர்த்தி ஒரு மர்ம கொள்ளைக் கும்பலின் வலையில் வீழ்கிறார். அவர் மீதான திருட்டுப் பழியை தன் தங்கைக்காக தங்கம் ஏற்றுக் கொள்கிறார். தங்கத்தை காவல் துறையினர் ஒருபக்கமும் கொள்ளைக் கும்பல் ஒருபக்கமும் தேடுகின்றனர். இறுதியில் கொள்ளையர்களை காவல் துறையிடம் தங்கம் பிடித்துக் கொடுக்கிறார். தங்கத்துக்கு உறுதுணையாக அவரது காதலி கலாதேவி உள்ளார் நடிகர்கள்
தயாரிப்புமு. கருணாநிதியும், முரசொலி மாறனும் கடன் சிக்கலில் ஆழ்ந்து இருப்பதை அறிந்த ம. கோ. இராமச்சந்திரன் எங்கள் தங்கம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார்.[1] இப்படத்தில் நாயகனான தங்கம் (ம.கோ.இரா) சிறுசேமிப்புக்கு பணம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி துவங்கும் இந்தக் காட்சியில் மேடையில் முரசொலி மாறனும் இருப்பார். ஒரு காட்சியில் தங்கத்துக்கு பரிசு சீட்டில் பத்தாயிரம் ரூபாய் பரிசு விழும். அதை கா. ந. அண்ணாதுரை வழங்குவது போன்ற காட்சி வரும். அண்ணாதுரையுடன் இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி ஆகியோர் உடன் இருப்பர்.[7] கருப்பொருள்கள்இப்படத்தில் திமுகவின் கொடியின் நிறத்தில் உள்ள கறுப்பு சிவப்பு நிறத்திலான உடையை அணிந்தபடி இராமச்சந்திரன் ஏற்ற கதாபாத்திரம் தோன்றுவதாக இடம்பெற்றது. 1967 ஆம் ஆண்டு எம். ஆர். இராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு இராமச்சந்திரன் உயிர் பிழைத்ததைக் குறிப்பிடும் "நான் செத்துப் பிழைச்சவண்டா" என்ற பாடல் படத்தில் இடம்பெற்றது.[8][9] பாடல்கள்எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[10] "டோண்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்" பாடலில் ஆங்கில வரிகள் அடங்கும்.[6] "தங்கப்பதக்கத்தின் மேலே" பாடல் வெற்றிவேல் சக்திவேல் (2005) இல் மறுகலவை செய்யப்பட்டது.[11]
வெளியீடும், வரவேற்பும்எங்கள் தங்கம் 9 அக்டோபர் 1970 அன்று வெளியிடப்பட்டது.[12] படம் வீனஸ் மூவீஸ் நீறுவனத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டது.[13] இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[1] இது இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதைப் பெற்றது.[14] மேலும் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை வாலி பெற்றார்.[15] புஷ்பலதா சிறந்த குணச்சித்திர நடிகைக்கான (பெண்) தமிழ்நாடு அரசு திரைப்பட விருதைப் பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia