குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும்
சுவரிதழ்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம். புரொடக்சன்சு
இசைஎம். எஸ். விஸ்வநாதன், பாடல்கள்: வாலி
நடிப்புஜெய்சங்கர்
ஜமுனா
வெளியீடுநவம்பர் 19, 1965
நீளம்4788 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த குழந்தைகள் தமிழ்த் திரைப்படமாகும். இது அமெரிக்கத் திரைப்படமான தி பேரண்ட் ட்ராப் (1961) ஐ அடிப்படையாகக் கொண்டதாகும்.[1] அது எரிச் காஸ்ட்னரின் 1949 ஆம் ஆண்டய செர்மன் புதினமான லிசா அண்ட் லோட்டியை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க நாகேஷ், சுந்தர்ராஜன், ஜி. வரலட்சுமி, சாந்தா, குட்டி பத்மினி, எம். எஸ். எஸ். பாகாயம், வி. ஆர். திலகம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். பிரிந்த பெற்றோரை மீண்டும் சேர்க்க முயற்சிக்கும் இரட்டை சகோதரிகளின் கதையை இது சொல்கிறது.

ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்து எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் 19 நவம்பர் 1965 அன்று வெளியானது. இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. இப்படத்தை கிருஷ்ணன்–பஞ்சு இரண்டு முறை மறு ஆக்கம் செய்தனர்; தெலுங்கில் லேத மனசுலு (1966) என்றும், இந்தியில் தோ கலியான் (1967) என்றும் மறு ஆக்கம் செய்தனர். மேலும் இது இது மலையாளத்தில் சேதுபந்தனம் (1974) என்றும் கன்னடத்தில் மக்களா பாக்யா (1976) என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

கதை

தனியார் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளரான அலமேலு (ஜி. வரலட்சுமி) பணத் திமிர் கொண்டவர். அவரின் மகளான பாமா என்னும் சத்யபாமாவும் (ஜமுனா) சந்திரசேகர் என்னும் சேகரும் (ஜெய்சங்கர்) காதலிக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகி, சேகர் வீட்டோடு மாப்பிளை ஆகிறார். மாமியார் அலமேலுவால் வீட்டோடு மாப்பிளையாக உள்ள சந்திரசேகரை அவ்வப்போது அவமானங்களை எதிர்கொள்கிறார். சத்தியபாமாவுக்கும், சந்திரசேகருக்கும் இரட்டைப் பெண் பிள்ளைகள் பிறக்கின்றனர் (லலிதா, பத்மினி). ஒரு கட்டத்தில் மாமியாரின் அவமானங்களைப் பொறுக்க முடியாத சந்திரசேகர் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இதனால் இரட்டையர்களான லலிதாவும் பத்மினியும் பிறந்த சிலகாலத்திலேயே பிரிந்து விடுகின்றனர். ஓரளவு வளர்ந்த பின்னர், சகோதரிகள் தங்கள் பெற்றோரை மீண்டும் ஒன்றுசேர்க்க முடிவு செய்கிறார்கள், அதற்காக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

நடிப்பு

இசை

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[5][6] "பழமுதிர் சோலையிலே" என்ற பாடல் ஆபேரி இராகத்தில் அமையப்பெற்றது.[7]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடியோர் நீளம்
1. "என்ன வேகம் சொல்லு பாமா"  வாலிடி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் 4:42
2. "அன்புள்ள மான் விழியே"  வாலிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:47
3. "நான் நன்றி சொல்வேன்"  வாலிம. சு. விசுவநாதன், பி. சுசீலா 3:48
4. "அன்புள்ள மான் விழியே" (சோகம்)வாலிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:32
5. "குழந்தையும் தெய்வமும்"  கண்ணதாசன்பி. சுசீலா 3:57
6. "குழந்தையும் தெய்வமும்" (சுடரொளிக் களியாட்டப் பாடல்)கண்ணதாசன்பி. சுசீலா 1:30
7. "பழமுதிர் சோலையிலே"  வாலிபி. சுசீலா 4:12
8. "ஆஹா இது நள்ளிரவு"  கண்ணதாசன்எல். ஆர். ஈசுவரி 4:04
9. "கோழி ஒரு கூட்டிலே"  கண்ணதாசன்எம். எஸ். இராஜேஸ்வரி 2:54
மொத்த நீளம்:
33:26

மேற்கோள்கள்

  1. "ஹாலிவுட் பட பாதிப்பில் உருவான ‘குழந்தையும் தெய்வமும்’". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1155684-kuzhandhaiyum-dheivamum-analysis.html. பார்த்த நாள்: 2 November 2024. 
  2. 2.0 2.1 2.2 Dhananjayan 2014, ப. 188.
  3. 3.0 3.1 Glaser 2022, ப. 108.
  4. 4.0 4.1 Glaser 2022, ப. 109.
  5. "Kuzhandaiyum Deivamum". JioSaavn. 19 November 1965. Archived from the original on 4 February 2019. Retrieved 4 February 2019.
  6. "Kuzhandaiyum Deivamum Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 22 August 2022. Retrieved 22 August 2022.
  7. Charulatha Mani (5 August 2011). "A Raga's Journey – Aspects of Abheri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151009045743/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-aspects-of-abheri/article2325286.ece. 

நூல்பட்டியல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya