எச். கே. பைரோதியா விருதுகள்
எச். கே. பைரோதியா விருதுகள் (H. K. Firodia Awards) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் எச். கே. பைரோதியா அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது . எந்தவொரு அறிவியல் துறையிலும் இந்திய அறிவியலாளர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காகவும், இளம் இந்தியர்களிடையே அறிவியல் உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும் இந்த விருதுகள் 1996-ல் தொடங்கப்பட்டன. புனேயில் நடைபெறும் விழாவில், கபில் சிபல், முகேசு அம்பானி, வர்கீஸ் குரியன் போன்ற முக்கிய விருந்தினர்களால் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுஎச். கே. பைரோதியா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் 2 பேருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்து, உலகத் தரம் வாய்ந்த பணிகளைச் செய்து, தன்னைத் தானே சிறப்பித்துக் கொண்ட எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும். வேளாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் முதல் விண்வெளி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களின் பட்டியல்ஆதாரம்: HK ஃபிரோடியா அறக்கட்டளை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia