என். அன்புச்செழியன்
நீ. அன்புச்செழியன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் செக்கப்பட்டி கிராமத்தில் (இப்போது திண்டுக்கல் பகுதி) பிறந்து வளர்ந்தார். இவர் 1967-1971 காலகட்டத்தில் திண்டுக்கல் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அன்புச்செழியன் பின்னர் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆரம்ப கால வாழ்க்கைஎன். அன்புச்செழியன் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் செக்கப்பட்டி கிராமத்தில் (இப்போது திண்டுக்கல் பகுதி) 1 நவம்பர் 1936 இல்,) பிறந்தார். இவரது தந்தை ஏ. நீலமேகம் பிள்ளை ஒரு விவசாயி. இவர் தனது பள்ளிப்படிப்பை தனது சொந்த கிராமத்திலேயே மேற்கொண்டார். விருதுநகர் இந்து நாடரின் செந்திகுமாரா நாடார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார்; பின்னர் மதராசின் சர் தியாகரசர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை பச்சாயப்பா கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.[3] அரசியல்அன்புச்செழியன் திமுக உறுப்பினராக இருந்தார். 1962 தேர்தலில் போது நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் (பொது) திமுக சார்பில் போட்டியிட்டார். 944 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். 1967 ஆம் ஆண்டு நான்காவது மக்களவைக்கான தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட இவரை திமுக திலைவர் கா. ந. அண்ணாதுரை தேர்வு செய்தார். இவர்தான் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கபட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி அல்லாத முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய அமைச்சருமான டி. எஸ். சௌந்தரம் அவர்களை 100,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1971 சட்டமன்றத் தேர்தலில் இதேகாவின் சின்னசாமி செட்டாயை 9,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 1971-1976 காலகட்டத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதே காலகட்டத்தில், இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் இதேகா வேட்பாளர் ராதாகிருஷ்ண செட்டியாரை தோற்கடித்தார். மேலும் அன்புச்செழியன் தனது சொந்த கிராமமான சேகப்பட்டியில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia