கற்புக்கரசி
கற்புக்கரசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். கே. ராதா, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] திரைக்கதைச் சுருக்கம்ஒரு தேவ கன்னிகையான சசிகலாவை, 'தான் அடைய வேண்டும்' என ஒரு மந்திரவாதி விரும்புகிறான். மன்னராக இருக்கும் ஒருவரை, அவரது மகன், ஒரு கிரகண தினத்தில் கொல்ல வைத்தால், சசிகலாவை 'தான் அடையலாம்' என மந்திரவாதிக்குத் தெரிய வருகிறது. நடிகர்கள்நடிகர்கள் பட்டியல், கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.[3]
தயாரிப்புக்குழுஇந்தப் பட்டியல், 'கற்புக்கரசி' பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.[3]
பாடல்கள்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், ஏ. மருதகாசி, உடுமலை நாராயண கவி ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினர். பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். எல். வசந்தகுமாரி இருவரும் பாடிப் பிரபலமான கனியோ, பாகோ, கற்கண்டோ... பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia