எருமுத்தனப்பள்ளி

எருமுத்தனப்பள்ளி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ்குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,200 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

எருமுத்தனப்பள்ளி, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அஞ்செட்டி[4] ஊராட்சிக்குப்பட்ட கிராமம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இது சுமார் 1120 மக்கள் தொகையினை கொண்டது (ஆண்-700-பெண்420) மலைத் தொடர்களும், காடுகளும் அதிகம். மேலும் இது 420 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்கு வாழும் மக்களின் முன்னோர்கள் முதல்முதலில் வாழ்ந்ததாக-உப்புரானெ, தோடே கௌடுன் கெரே, சிவுலாங்காரி போன்ற இடங்கள் கூறப்படுகின்றன. கர்நாடக வாழ் மக்களாக வாழ்ந்த இவர்கள் காலப்போக்கில் தமிழக பகுதியில் குடிபெயர்ந்தனர். இப்பகுதியில் வாழும் மாரம்மா (ಮಾರಮ್ಮ) (பெண்-94) குறிப்பிடுகையில் உப்புரானெ, தோடே கௌடுன் கெரே,சிவுலாங்காரி பகுதியில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் மற்றும் காலரா போன்ற காரணத்தால் தற்போது உள்ள எருமுத்தனப்பள்ளி பகுதியில் குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இப்பகுதியில் பழங்குடியின மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியின மக்கள் இயற்கை கடவுள்களையே அதிகம் வணங்குகின்றனர்..

சிறப்பு

இப்பகுதி திம்மேகவுடு மற்றும் மாதேகவுடு என்ற குறுநில மன்னர்களால் நிர்வகிக்கப்பட்டது. எருமுத்தனப்பள்ளி வனப்பகுதியில் சுமார் 2000 வருடம் பழமை வாய்ந்த குளம் மற்றும் அக்கால மக்களால் வழிபடப்பட்ட வன தேவதை கோவில்கள் உள்ளன. மேலும் இங்கு மிகப்பழமை வாய்ந்த அக்கால மக்களால் கட்டப்பட்ட கல் வழித்தடங்கள் மற்றும் ஊர் எல்லையை சுற்றிலும் கல்லினால் கட்டப்பட்ட கற்கோட்டைகள் இன்றும் காணக்கிடைக்கின்றன. இப்பகுதியில் 420 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 கிணறுகள் உள்ளன. சுமார் 1,200 வகையான மருத்துவ செடிகளும், 300க்கும் மேற்பட்ட மருத்துவ மரங்களும், 4 நீர் அருவிகளும், ஒரு பெரிய ஆறும், பழங்கால கல் கோட்டைகளும், கல் கால் வழித்தடமும் காணப்படுகின்றன.

சிவுலாங்காரி பகுதியில் காணப்படும் ஒரு பழங்கால கல் கோட்டை இது சுமார் 180 வருட பழமை வாய்ந்தது. மோடப்பா (வயது-90) என்பவர் எருமுத்தனப்பள்ளியினைச் சேர்ந்த ஒரு பழங்கால சித்த மருத்துவர். இந்த வயதிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சுயமாகவே விவசாயம் செய்து வருகிறார். எருமுத்தனப்பள்ளி சுற்றிலும் சுமார் 7,000 மீட்டர் உயரம் கொண்ட 26மலைகளைக் கொண்டுள்ளது. இது கர்நாடகாவில் அமைந்துள்ள மலைமாதெஷ்வரன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. வரலாற்றில் காணப்படாத பல மலைத்தொடர்களும், பழங்கால கோவில்களும், இயற்கை காட்சிகளும் காணப்படுகின்றன..

சுற்றுலாதலங்கள்

எருமுத்தனப்பள்ளியில் ஆனெபீதி மடா என்ற அருவியும், அஞ்செட்டிக்கு அருகில் மெட்ரெ என்ற அருவியும் இதற்கு அழகை சேர்க்கின்றன. காட்டுப்பகுதியில் 32கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலகூலியப்பன் எனும் கோவிலுக்கு சுமார் 145 வருடங்களாக எருமுத்தனப்பள்ளி கிராம மக்கள் சென்று வருகின்றனர். இக்கோவில் அவர்களின் பாரம்பரியக் கோவிலாகக் கருதப்படுகிறது. அக்கால கற்சிலைகளும், கோவிலும் காணப்படுகின்றன..

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-07-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya