ஏ. சிறீதர மேனன்
ஏ. சிறீதர மேனன் என்று அழைக்கப்படும் ஆலாப்பத்து சிறீதர மேனன் (18 டிசம்பர் 1925 - 23 ஜூலை 2010) கேரளாவைச் சேர்ந்த ஒரு தென்னிந்திய வரலாற்றாசிரியர் ஆவார்.[1] இவர் கேரள மாவட்ட வர்த்தமானிகளின் (1961-1975) மாநில ஆசிரியர் (1958-68) என்று அழைக்கப்படுகிறார். 1980 ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 1968-1977 வரை கேரள பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றினார்.[2] மேனன் கொச்சி மகாராஜா கல்லூரியில், (ஆங்கிலம்) மற்றும் சென்னை பல்கலைக்கழகம் (வரலாறு) ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1953 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காக இவருக்கு ஸ்மித் முண்ட் உதவித்தொகை மற்றும் ஃபுல்பிரைட் பயண மானியம் வழங்கப்பட்டது. அங்கு இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.[3] இவர் இந்தியா திரும்பியதும், கேரள அரசால் 1958 இல் கேரள அரசிதழ்களின் மாநில ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.[4] மேனன் 2009 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம பூசண் விருத்தினைப் பெற்றார்.[1] மேனன் 23 ஜூலை 2010 அன்று, தனது 84 வயதில், சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இறந்தார். இவருக்கு சரோஜினி மேனன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். வாழ்க்கை மற்றும் கல்விஆலாப்பத்து சிறீதர மேனன் 1925 டிசம்பர் 18 அன்று கொச்சின் இராச்சியத்தில் ( பிரித்தானியாவின் இந்தியா ) எர்ணாகுளத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கோவிலகத்து பரம்பில் பத்மநாப மேனன் மற்றும் ஆலாப்பத்து நாராயணி அம்மா ஆகியோர்.[5] மேனன் 1941 ஆம் ஆண்டில் முதல் வகுப்புடன் பத்தாம் வகுப்புச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1942 இல் இந்தி, இந்திய வரலாறு மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றில் வேறுபாட்டைக் கொண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1944 ஆம் ஆண்டில், கொச்சின் மன்னரின் உதவித்தொகையுடன், கொச்சி மகாராஜா கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார், கரிம்பத்து இராம மேனன் தங்கப் பதக்கத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். 1948 இல் வரலாற்றில் முதல் தரவரிசைஉடன் பட்டம் பெற்றார். 1944-49 வரை, திருச்சூர் புனித தோமையா கல்லூரியில் பணிபுரிந்தார். பின்னர், 1949 இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் துறையில் சேர்ந்தார்.[3] கல்வி வாழ்க்கை1953 ஆம் ஆண்டில்,சிறீதர மேனனுக்கு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளுக்காக இந்தியாவில் அமெரிக்க கல்வி அறக்கட்டளை ஸ்மித் முண்ட் உதவித்தொகை மற்றும் ஃபுல்பிரைட் பயண மானியம் வழங்கியது. அங்கு இவர் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] இவர் இந்தியா திரும்பியதும், 1958 ஆம் ஆண்டில் கேரள மாவட்ட அரசிதழ்களின் முதல் மாநில ஆசிரியராக கேரள அரசால் நியமிக்கப்பட்டார். அடுத்த பத்து ஆண்டுகளில், மேனன் மாவட்ட வர்த்தமானிகளின் எட்டு தொகுதிகளை [4] - திருவனந்தபுரம் (1961), திருச்சூர் (1961), கோழிக்கோடு (1962), கொல்லம் (1964), எர்ணாகுளம் (1965), ஆலப்புழா (1968), [[கண்ணூர் (1972), மற்றும் கோட்டயம் (1975) ஆகிய (கேரளாவின் ஒன்பது மாவட்டங்கள்) தொகுத்தார். பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் வர்த்தமானிகளின் உள்ளடக்கங்களின் தரம் ஆகியவை இந்திய அரசின் மத்திய அரசிதழ்கள் பிரிவு உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றன. . அரசியல் கருத்துக்கள்ஏ. சிறீதர மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) எதிர்பாட்டு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.[6] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia