ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (Prime Minister of the United Kingdom of Great Britain and Northern Ireland) ஐக்கிய இராச்சிய அரசுத் தலைவர் ஆவார். பிரதமரும் அவரது மூத்த அமைச்சர்களடங்கிய அமைச்சரவை ஆயமும் அவர்களது அரசாட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அரசிக்கும், நாடாளுமன்றத்திற்கும், தங்கள் அரசியல் கட்சிக்கும் இவர்கள் மூலமாக வாக்காளப் பெருமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்பானவர்கள். தற்போதைய பிரதமராகப் பொறுப்பாற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் இரிசி சுனக்கு அக்டோபர் 25, 2022இல் அரசரால் நியமிக்கப்பட்டார். பிரித்தானியப் பிரதமராக முதலில் பணியாற்றியவர் இராபர்ட் வால்போல் ஆவார். 1721இல் இவர் கருவூலத்தின் முதல் பிரபு என அழைக்கப்பட்டார். பிரதமர் என அழைக்கப்பட்ட முதல் பெருமை 1905இல் பணியாற்றிய சர் ஹென்றி கேம்ப்பெல் கானர்மேனுக்கு கிடைத்தது. தமது பணிக்காலத்தில் பிரித்தானியப் பிரதமர்கள் 10 டௌனிங் சாலையில் வசிக்கின்றனர். வாழும் முன்னாள் பிரதமர்கள்ஐந்து முன்னாள் பிரித்தானியப் பிரதமர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்:
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia