ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination சுருக்கமாக ஜே இ இ JEE ) என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வாகும். இது முதன்மை மற்றும் மேல் நிலை ஆகிய இரு முறைகளில் நடத்தப்படுகிறது. .ஒருங்கிணைந்த இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) மொத்தம் 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், 31 தேசிய தொழினுட்பக் கழகங்கள், 25 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் மற்றும் பிற அரசு நிதியுதவி பெறும் தொழினுட்பக் கழகங்களில் பயில்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. முதன்மை மற்றும் மேல் நிலை ஆகிய தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.[1] இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs), இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE), ராஜீவ் காந்தி தொழினுட்ப பெட்ரோலிய நிறுவனம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப க் கழகம் (IISERs),இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற சில நிறுவனங்கள் , இதன் மேல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கையினை மேற்கொள்கிறது.[2] [3] இந்திய தொழினுட்பக் கழகத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் ஜே இ இ தேர்வினை எழுத இயலாது. ஜேஇஇ-முதன்மைமுதன்மைக் கட்டுரை:ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை முதன்மைத் தேர்வினை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. தாள்-I மற்றும் தாள்-II என இரண்டு தாள்களைக் கொண்டுள்ளது. தேர்வர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் தேர்வு செய்யலாம். இரண்டு தாள்களிலும் பலவுள் தெரிக வகையிலான கேள்விகள் உள்ளன. தாள்-I BE/B.Tech படிப்புகளுக்கான சேர்க்கைக்கானது மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்தப்படுகிறது. தாள்-II என்பது B.Arch மற்றும் B.Planning படிப்புகளில் சேர்வதற்கானது மற்றும் 'டிராயிங் டெஸ்ட்' தவிர கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்தப்படும், 'டிராயிங் டெஸ்ட்' பேனா மற்றும் காகித முறை அல்லது இணையவழி இல்லாத முறையில் நடத்தப்படும் . சனவரி 2020 முதல், இளம் அறிவியல் திட்டமிடல் படிப்புகளுக்குத் தனியாக தாள்-III அறிமுகப்படுத்தப்படுகிறது. [4] ஜேஇஇ-மேல் நிலைமுதன்மைக் கட்டுரை: ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு - மேல் நிலை இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs), இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE), ராஜீவ் காந்தி தொழினுட்ப பெட்ரோலிய நிறுவனம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப க் கழகம் (IISERs),இந்திய அறிவியல் நிறுவனம் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்காக இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு தொழினுட்பக் கழகத்தால் நடத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில்,ஐஐடி டெல்லி நடத்தியது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இது முறையே ஐஐடி காரக்பூர், ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவற்றால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலைத் தேர்வை எழுத தகுதி பெறுகின்றனர். 2018ஆம் ஆண்டில் 2,24,000 தேர்வர்கள் மேல்நிலைத் தேர்வை எழுத தகுதிபெற்றனர்.[5] இந்த எண்ணிக்கை 2017 இல் 2,20,000 ஆகவும் 2016 இல் 2,00,000 ஆகவும் இருந்தது.[6] மேலும் பார்க்கவும்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia