ஓம் பிரகாசு பாசின் விருது
ஓம் பிரகாசு பாசின் விருது (Om Prakash Bhasin Award) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இந்திய விருது ஆகும்.[1] தனிநபருக்கோ அல்லது கூட்டாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. வருடாம் தோறும் வழங்கப்படும் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மேற்கோள் தகட்டுடன், ₹100,000 பண பரிசும் வழங்கப்படுகிறது.[2] விருதாளர்கள் ஓம் பிரகாசு பாசின் நினைவு சொற்பொழிவை வழங்க அழைக்கப்படுகிறார்கள். விவரம்ஓம் பிரகாசு பாசின் விருதுகளை புதுடில்லியைச் சேர்ந்த ஸ்ரீஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை நிறுவியது.[1] வினோத் பாசின், தனது இரண்டு மகன்களான சிவி பாசின் மற்றும் ஹேமந்த் குமார் பாசின் ஆகியோருடன் தன்னுடைய கணவரின் நினைவாக இந்த விருதினை நிறுவினார். ஓம் பிரகாசு பாசின், வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்ஆவார்.[3] ஓம் பிரகாசு பாசின் இறப்பதற்கு முன்னர் ₹ 5.100.000 வைப்பு நிதியில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். 1985ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. தேர்வு ஒரு அறிவிக்கப்பட்ட நடைமுறை மூலம் மற்றும் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த குழுவில் அறக்கட்டளையின் தலைவர், அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அறங்காவலர்கள், அறிவியல் சமூகத்தின் உறுப்பினர் ஓருவர் மற்றும் பாரத்ச் ஸ்டேட் வங்கியின் பிரதிநிதி உறுப்பினராக உள்ளனர். தற்போதைய குழு உறுப்பினர்கள்:
பிரிவுகள்
விருதுபெற்றவர்கள்விவசாயமும் தொடர்புடைய அறிவியலும்ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம்
உயிரி தொழில்நுட்பவியல்ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2020-11-06 at the வந்தவழி இயந்திரம்
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2023-02-20 at the வந்தவழி இயந்திரம் ![]()
பொறியியல், எரிசக்தி மற்றும் விண்வெளிஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம் ![]() ![]() ![]() ![]() ![]()
சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல்ஆதாரம்: ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை பரணிடப்பட்டது 2022-02-18 at the வந்தவழி இயந்திரம் ![]()
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia