கங்கார்
கங்கார் (Kangar) என்பது மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[1] இதன் மக்கள் தொகை 48,898. பரப்பளவு 2,619.4 ஹெக்டர். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் பெர்லிஸ் ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது.[2][3] காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்துதான் கங்கார் நகரத்தின் பெயர் உருவானது. இந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப் படுகிறது. அந்த நெல் உற்பத்தியைச் சேகரிக்கும் மையமாகவும் இந்த நகரம் விளங்குகிறது. கங்கார் நகராட்சி மன்றம் ஆராவ் மற்றும் காக்கி புக்கிட் ஆகிய அண்டை நகராட்சி மன்றங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது. கங்கார் நகரத்தின் மையத்தில் சேனா மாவட்டாரம் (Sena Province) உள்ளது. இந்த நகரம் மலேசியாவின் மிகச் சிறிய மாநிலத் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள்; அரசு ஊழியர்கள். இதன் தொழில்கள்: பைஞ்சுதை தயாரிப்பு; மரப் பலகை தயாரிப்பு; ரப்பர் உற்பத்தி; காகிதத் தயாரிப்பு; சீனி தயாரிப்பு; இறால் மீன்களை பதப்படுத்துதல் ஆகியவையாகும்.[4] வரலாறு![]() ![]() ![]() ![]() கங்கார் நகரம் ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் கண்டு விட்டது. 1653-ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தின் 14-ஆவது சுல்தானாக இருந்த சுல்தான் முஹைதீன் மன்சோர் ஷாவின் (Muhyiddin Mansur Shah of Kedah) நிர்வாக மையமாக கோத்தா சேனா உருவாக்கப்பட்ட காலத்தில் தான் இந்த கங்கார் நகரமும் தோற்றம் கண்டது. அப்போது கங்கார் ஒரு நிலத் துறைமுகமாக இருந்தது. பெர்லிஸ் ஆற்றின் சங்கமத்தில் படகுகள்; இழுவைப் படகுகள் நங்கூரமிட்டுச் செல்வது வழக்கம். பெர்லிஸ் ஆறு, கங்கார் நகரம் வழியாக கோலா பெர்லிஸ் நோக்கிப் பாய்கிறது.[1] கங்கார் எனும் பெயர் ஒரு வகை மரத்தின் பெயராகும். அந்த மரத்திற்கு அடியில் தான் ஒரு துறைமுகம் இருந்தது. அங்குதான் வர்த்தகம் செய்யப் பட்டது, அந்தப் பெரிய மரம்; வணிகம் செய்ய வந்த வர்த்தகர்களுக்கு நிழலும்; ஓய்வு எடுக்க நல்ல அமைதியான சூழலையும் அளித்தது. பல வணிக ஒப்பந்தங்களுக்கு சாட்சியாகவும் இந்த மரம் அமைந்து போனது. அதனால் அந்த மரத்தை போகோன் கங்கார் (Pohon Kangar) என்று அழைத்தார்கள். அந்த துறைமுகத்திற்கு வந்து சென்ற ஒவ்வொரு வணிகரும் அந்த மரத்தின் நினைவாக அந்த இடத்தை போகோன் கங்கார் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.[1] முக்கியமான இடங்கள்கங்கார் நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் அழகான அமைதியான நகரம். பழைய கடைகளும் புதிய கடைகளும் கலந்த ஒரு கலவை நகரமாகக் காட்சி அளிக்கின்றது. இங்கு ஒரு நேர்த்தியான காலனித்துவக் காலத்துக் கட்டிடம் உள்ளது. பெர்லிஸ் மாநில செயலகக் கட்டிடம். தவிர 1930-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு கடிகாரக் கோபுரம் உள்ளது. இதுவும் பிரித்தானியா காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட கட்டமைப்பு தான். கங்கார் நகரத்தின் அடையாளச் சுவடுகள்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia