கெடா
கெடா (மலாய்: Kedah Darul Aman; ஆங்கிலம்: Kedah; சீனம்: 吉打) ஜாவி: قدح دار الامن; அரபு: قلحبر; தாய்லாந்து மொழி: ไทรบุรี; என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒரு மாநிலம் ஆகும். மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே அமைந்து உள்ளது.[2] வரலாற்று அடிப்படையில் கேடா (Queda) என்று அழைக்கப் படுகிறது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார். கெடா மாநிலத்தின் அரச நகரம் அனாக் புக்கிட். மற்ற முக்கிய நகரங்கள்: சுங்கை பட்டாணி (மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகர்ப்புற பகுதி); மற்றும் கூலிம்; பாலிங்; புக்கிட் காயூ ஈத்தாம்; சாங்லூன்; லூனாஸ்; லங்காவி. கடாரம் என்பது கெடா மாநிலத்தின் தமிழ்ப் பெயர். பழங்காலத்தில் இருந்து, கெடா நிலப்பகுதியைக் கடாரம் என்று தமிழர்கள் அழைத்து வருகிறார்கள். இருப்பினும் தற்போது மலேசிய ஊடகங்களிலும், மலேசியப் பள்ளிப்பாட நூல்களிலும் கெடா எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கடாரம் என்பது வரலாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[3] இதற்கான (அரபு மொழி: قتح ; (Kataha; Kalahbar); (qataḥa) அல்லது அரபு மொழி: قلحبر ; (qalaḥbar); அரபு நாட்டு வணிகர்கள் அவ்வாறு அழைத்து இருக்கிறார்கள். கெடா நிலப்பகுதி சயாமியர்களின் ஆட்சியில் இருந்த போது, அவர்கள் சைபுரி; (தாய்லாந்து மொழி: ไทรบุรี) என்று அழைத்து இருக்கிறார்கள்.[4][5] பொதுகெடா மாநிலத்தின் வடக்கே, பெர்லிஸ் மாநிலம்; மற்றும் தாய்லாந்தின் சொங்க்லா மாநிலம்; யாலா மாநிலம்; தெற்கே பேராக் மாநிலம் மற்றும் தென்மேற்கில் பினாங்கு; ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் இணைப் பெயர் டாருல் அமான் 'அமைதியின் வாழ்விடம்' என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. அதனால் தான் இந்த மாநிலத்தை 'மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம்' என்று அன்பாக அழைக்கிறார்கள். இந்த மாநிலத்திதான் லங்காவி எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவும் உள்ளது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. வரலாறுமெர்போக் ஆற்றுப் படுகையில் முதல் குடியேற்றம்கி.மு. 788-இல், கெடாவில் ஒரு பெரிய குடியேற்றத்திற்கான அரசாங்கம் மெர்போக் ஆற்றின் வடக்குக் கரையைச் சுற்றி நிறுவப்பட்டு உள்ளது. அந்தக் குடியேற்றம் பூஜாங் பள்ளத்தாக்கின் ஒரு பெரிய பகுதியைக் கொண்டு இருந்தது. மெர்போக் ஆறு மற்றும் மூடா ஆறு ஆகிய இரு ஆறுகளின் படுகைகள், சுமார் 1000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கியவை. குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[6] பூஜாங் பள்ளத்தாக்கு![]() 1936 - 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி. குவாரிச் வேல்ஸ் என்பவரும்; அவருடைய மனைவி டோரதி வேல்ஸ் என்பவரும்; பூஜாங் பள்ளத்தாக்கு எனும் ஒரு வரலாற்றுத் தளம் இருப்பதைத் தங்களின் அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகக் கண்டுபிடித்தார்கள். இவர்களுக்கு அல்சுதாயர் லேம்ப் எனும் வரலாற்று ஆய்வாளரும் உதவியாக இருந்தார். அவர்களின் அகழ்வாராய்ச்சியின் போது நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் மெர்போக், பெங்காலான் பூஜாங் எனும் இடத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.[7] இந்து-பௌத்த பேரரசுகள்அதன் பின்னர் அங்கு தொடர்ந்தால் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-பௌத்த பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது. பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரிகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.[8] அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்தது.[9] இந்திய இலக்கியத்தில் கெடாகடாரம் எனும் பெயரைத் தவிர, கெடா எனும் பெயர் இந்திய இலக்கியத்தில் வெவ்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3-ஆம் நூற்றாண்டு கௌமுதி மகோதுசுவ நாடகம் எனும் கையெழுத்துப் பிரதியில், கடாகா-நகரா என்று கெடாவைப் பற்றி சொல்லப்படுகிறது. ஆக்கினேய புராணம் அல்லது அக்கினி புராணம் எனும் பதினெண் புராணங்களின் எட்டாவது புராணத்தில் கெடா இராச்சியம், அண்டா-கதகா (சமசுகிருதம்: अग्नि पुराण; ஆங்கிலம்: Anda-Kataha) என்று விவரிக்கப் படுகிறது. 11-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கதாசரிதசாகரம் எனும் இந்திய புராணக் கதைகளின் தொகுப்பில்; கெடாவை கடாகா என்று விவரிக்கிறது. சமராயிச்சககா எனும் 6-ஆம் நூற்றாண்டு இந்தியப் புராணத் தொகுப்பு; கெடாவை கடாகா-திவிபா என்று சொல்கிறது.[10] பட்டினப்பாலை![]() கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்திப் பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
மத்திய கிழக்கு இலக்கியத்தில் கெடாஇசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகமான அப்பாசியக் கலீபகம் (கி.பி. 750) காலத்தில் வாழ்ந்த இபின் கோர்தாத்பே எனும் புவியியலாளர்; 'சாலைகள் மற்றும் ராஜ்யங்களின் புத்தகம்' (Book of Roads and Kingdoms) எனும் நூலை எழுதி இருக்கிறார். அதில் அவர் கெடாவை கெலா (Qilah) என்று குறிப்பிடுகிறார். மற்றொரு புவியியலாளரான சுலைமான் சிராப் என்பவர் எழுதிய 'ஆசியப் பயணங்கள்' எனும் நூலில் கெடாவை கெலா பார் என்று குறிப்பிடுகிறார். மற்றும் ஒரு புவியியலாளரான அபு-துலாப் மிசார் இப்னு முகல்கில் என்பவர் எழுதிய 'அலி ரிசலா அல் தனியா' எனும் நூலில் கெடாவை கெலா (Kalah) என்று குறிப்பிடுகிறார்.[11] சீன இலக்கியத்தில் கெடாகி.பி. 688 மற்றும் கி.பி. 695-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மலாய் தீவுக்கூட்டத்திற்கு யி ஜிங் எனும் புகழ்பெற்ற தாங் வம்ச புத்த துறவி பயணம் செய்தார். அவர் தீபகற்ப மலாயாவின் வடக்குப் பகுதியில் காச்சா என்று அழைக்கப்படும் ஓர் இராச்சியம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அந்த இராச்சியம்; ஸ்ரீ விஜயப் பேரரசின் தலைநகரமான போகா நகரில் இருந்து 30 நாட்கள் பயணத் தூரத்தில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.[12] மாறன் மகாவம்சன்![]() கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா வரலாறு (Kedah Annals;) எனும் ஒரு காப்பியம் உள்ளது. கெடா வரலாற்றை மேற்கோள் காட்டும் வரலாற்றுப் பதிவேடுகள். அதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.[13] ஆனால், உண்மையில் மாறன் மகாவம்சன் எனும் பெயர்தான் மேரோங் மகாவங்சா என்று திரிபுநிலை அடைந்தது. மேரோங் மகாவங்சாஅதில் மாறன் மகாவம்சன் எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா இராச்சியத்தை உருவாக்கியவர் என்று கெடா வரலாற்றுப் பதிவேட்டில் சொல்லப்படுகிறது. அந்த வகையில் கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது.[14] கெடா சுல்தானகம், பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதாகவும் கெடா வரலாற்றுப் பதிவேடு சொல்லப்படுகிறது. பின்னர் இந்த மன்னர் இசுலாம் சமயத்தைத் தழுவி சுல்தான் முசபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.[15] 1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் செயிக் அப்துல்லா குமானி என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா இராச்சியத்தின் கடைசி மன்னரான தர்பார் ராஜா II என்பவரை முஷபர் ஷா என்று பெயர் மாற்றம் செய்தார்.[16] மாறன் மகாவம்சன் பிள்ளைகள்மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள்.
மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி கஞ்சில் சார்சுனா கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்சுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், இலங்காசுகத்தின் அரசரானார்.[14] ராசபுத்திரி இந்திரவம்சன்ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் அவரின் தங்கை ராசபுத்திரி இந்திரவம்சன் என்பவர் இலங்காசுகத்தின் அரசியானார். கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவானது. இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராசபுத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர். மகா இந்திரவம்சன்அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மூன்றாவது மகனாகும். இவரைத் தான் ராஜா பெர்சியோங் (தமிழ்: கூர்ப் பல் அரசன்; ஆங்கிலம்: King of the Fanged Wings; மலாய்: Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது. இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து அகற்றப் பட்டார். இவர் ஜெராய் மலையில் அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).[16] கெடா வரலாற்றுப் பதிவேடுகள்பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்குத் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தாயாருடன் வளர்ந்து வந்தார். இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வரவே இல்லை. ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டார். ஜெராய் மலை அடிவாரத்தின் கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள். இந்த பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa). தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சொல்கின்றன.[16] கெடா மாநில ஆட்சியாளர்கள்(கெடா வரலாற்றுப் பதிவேடுகளில் இருந்து: மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவரின் வாரிசுகள்)
சீனாவின் மிங் அரசக் கையேடுகளின் பதிவுகளின்படி (Ming Chronicles) கெடா பேரரசின் கடைசி இந்துமத அரசராக இருந்தவரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). மதமாற்றம் நடந்த பின்னர் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது என்று மிங் அரசக் கையேடுகள் சொல்கின்றன.[17][18] பின்னர் கெடா பேரரசு கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள்.[19] ஸ்ரீ விஜய பேரரசு7-ஆம் 8-ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் பிடிமானம் இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்திய மற்றும் அரேபியச் சான்றுகள் ஸ்ரீ விஜய காலத்தில், கெடாவை இரண்டு முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதுகின்றன.[20] கெடாவின் ராஜாவை மலாக்கா நீரிணையின் ஆட்சியாளர் என்றும் "ஸ்ரீவிஜயா மற்றும் கடாஹாவின் ஆட்சியாளர்" (Ruler of Srivijaya and Kataha) என்றும் அழைக்கின்றன.[21] இராஜேந்திர சோழன்1025-ஆம் ஆண்டில், தென்னிந்தியாவின் சோழ மன்னன் இராஜேந்திர சோழன், ஸ்ரீ விஜயா பேரரசின் மீதான சோழர் படையெடுப்பில் கெடாவைக் கைப்பற்றினார். சில காலம் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த்தார்.[22] 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ வம்சத்தைச் சேர்ந்த வீர ராஜேந்திர சோழனால் கெடாவின் மீது இரண்டாவது படையெடுப்பு நடத்தப்பட்டது.[23] அதே காலக் கட்டத்தில் தென்னிந்தியாவில் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது, கெடாவில் சோழர்களின் ஆதிக்கம் மீண்டும் நிறுவப்பட்டது.[24] சயாமிய தாக்குதல்கள்ஸ்ரீ விஜயா பேரரசின் ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள், கெடாவை ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா சுல்தானகம் கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களும்; சுமத்திராவின் ஆச்சே அரசும்; கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்தத் தாக்குதல்களில் இருந்து பிரித்தானியர் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில், 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பினாங்கு தீவும்; செபராங் பிறை (முன்னர்: ஆங்கிலம்: Province Wellesley; தமிழ்: புரோவின்சு வெல்லசுலி) பகுதியும் பிரான்சிஸ் லைட் எனும் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909)![]() இருப்பினும் சயாமியர்கள் 1821-இல் கெடாவின் மீது படையெடுத்தனர். இந்தப் படையெடுப்பிற்கு கெடாவின் மீது சயாம் படையெடுப்பு (Siamese Invasion of Kedah) என்று பெயர்.[25] சயாமிற்கு வழங்கப்பட வேண்டிய பூங்கா இமாஸ் (Bunga Mas) எனும் திறை செலுத்தப் படாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கட்டத்தில் கெடா சுல்தானுக்கு பிரித்தானியரின் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர், சைபுரி (Syburi) என்ற பெயரில் சயாமியர்கள் கெடாவைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.[26] 1896-ஆம் ஆண்டில், கெடா; பெர்லிஸ்; மற்றும் செத்துல் (Kingdom of Setul Mambang Segara); ஆகியவை சயாமிய மாநிலமான மொன்டோன் சிபுரி மாநிலத்துடன்டன் (Monthon Syburi) இணைக்கப்பட்டன. 1909-ஆம் ஆண்டு, பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) எனும் ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை (Anglo-Siamese Treaty of 1909) கையெழுத்தானது. அதன் மூலம் கெடா மாநிலம் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டது.[27] புவியியல்மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கெடா மாநிலம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு 9,500 ச.கிலோ மீட்டர்கள். (3,700 சதுர மைல்கள்) மாநிலத்தின் மக்கள் தொகை 1,890,098.[28] இங்குள்ள பெடு ஏரி மனிதர்களால் உருவாக்கப் பட்ட மிகப் பெரிய ஏரி ஆகும்.[29] அரசாங்கமும் அரசியலும்அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார். மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர். இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவ்ர் இருக்கின்றார். இவர் (Parti Islam Se-Malaysia எனும் PAS) மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர். முதலமைச்சர்கள் பட்டியல்
பொருளியல்கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கிறார்கள். (மலேசிய மொழியில்: Jelapang Padi) நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நெல் இங்கு விளைச்சல் ஆகின்றது. ரப்பர், செம்பனை, புகையிலை போன்றவையும் பயிர் செய்யப் படுகின்றது. லங்காவித் தீவு அதிக சுற்றுப் பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளமாக சிறப்பு பெறுகின்றது. 1996-இல் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. இன்டெல் (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன. மேலும் காண்கமேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia