கடல் புறா

கடல் புறா
புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசீன்-தற்காலம்
Larus vegae mongolicus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
லேரி
குடும்பம்:
பேரினங்கள்

11

கடல் புறா (Gull) இது துறைமுகம், கடற்கரை, உப்பங்கழி ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கிறது. இவை கூட்டமாகச் செம்பருந்து, பழுப்புத் தலைக் கடல் காகம் முதலியவற்றோடு சேர்ந்து துறைமுகப்பகுதிகளில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இது மீன்கள், புழுபூச்சிகள், கப்பலிலிருந்து எறியப்படும் அழுகிய பண்டங்கள் முதலியவற்றை உண்கின்றன. பிற பறவைகளை அச்சுறுத்தி அவை தேடிய உணவை கவர்ந்து விடுகின்றன.

உடலமைப்பு

சாம்பல் அல்லது வெண்மை நிறமாகவும், தலை, இறக்கை முனைகள் முதலியன கருமையாகவும் காணப்படும். இதற்கு நீண்ட கூர்மையான சிறகுகளும், குட்டையான கழுத்தும், காலும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும் , பிளவுபட்ட வாலும் உடையது. அதன் அலகு ஆப்பு வடிவில் இருக்கும்.

வாழ்வியல்

அது புல் அல்லது கடல் தாவரங்களால் கூடுகளை அமைக்கும். இது தன் கூடுகளை மணல் மேட்டிலோ , சதுப்பு நிலத்திலோ, சிறு குன்றின் மீதோ, நீரின் மேற்பரப்பிலோ, மரத்தின் மேலும் இனத்திற்கேற்றவாறு அமைக்கும். ஒரே சமயத்தில் 2 அல்லது 3 முட்டைகளை இடும். ஆண் , பெண் இரு பாலினமும் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.

வாழிடம்

ஐரோப்பாவிலும், நடு ஆசியாவிலும்,மேல் ஆசியாவிலும், வாழும்[1]

சான்றுகள்

  1. அறிவியல் களஞ்சியம் தாெகுதி ஏழு தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya