ராமநகரம் மாவட்டம்
ராமநகரம் மாவட்டம் என்பது கர்நாடகாவில் பெங்களூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டம். இது 2007 ஆம் ஆண்டு, ஆகத்து 23 ஆம் நாள் பெங்களூர் நாட்டுப்புறம் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது.[1] இதன் தலைமையிடம் இராமநகரம் ஆகும். இது பெங்களூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பட்டு உற்பத்தியின் மூலம் பொருளாதாரம் சீர்நிலையை அடைகிறது. இங்கு கிரானைட் கற்களும் உள்ளன. மாவட்ட நிர்வாகம்இராமநகரம் மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]
மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 1,082,636 ஆகும். அதில் ஆண்கள் 548,008 மற்றும் 534,628 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.22% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 88.60 %, இசுலாமியர் 10.56 %, கிறித்தவர்கள் 0.59 % மற்றும் பிறர் 0.26% ஆக உள்ளனர்[3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia