கனிராவுத்தர்குளம்
கனிராவுத்தர்குளம் (ஆங்கிலம்: Kaniravutharkulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியான பெரியசேமூர் பகுதியிலுள்ள ஒரு குளமாகும்.[1] இப்பகுதியிலுள்ள குளம் கனிராவுத்தர்குளம் என்று அழைக்கப்படுகிறது. [2][3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 195 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கனிராவுத்தர்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′51″N 77°41′52″E / 11.364300°N 77.697700°E ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, சூளை, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கனிராவுத்தர்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி மற்றும் வட தமிழக பகுதியிலிருந்து வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்காக, பெரியசேமூர் கனிராவுத்தர்குளம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைப்பது குறித்து திட்டம் உருவாகி உள்ளது.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia