கன்னிராசி (2020 திரைப்படம்)
கன்னி ராசி (Kanni Raasi) என்பது 2020ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். முத்துகுமாரன் இயக்கிய இப்படத்தை ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் இதில் பாண்டியராஜன், யோகி பாபு, காளி வெங்கட், ரோபோ சங்கர் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்தனர். கதைஇப்படம் காதல் திருமணத்தின்மீது வெறுப்பு கொண்ட நாயகன் பற்றியது. இது குறித்து நாயகன் கதாநாயகியிடமோ, அவனது அண்டை வீட்டாரிடமோ பகிர்ந்து கொள்ளாமல் உள்ளான். இதனால் என்ன சிக்கல்கள் தோன்றுகிறது என்பதே கதை. நடிகர்கள்
தயாரிப்பு2015 நவம்பரில், நடிகர் ஜீவா அறிமுக இயக்குநர் முத்துகுமாரின் இயக்கத்தில் ஜெமினி கணேசன் என்ற காதல் நகைச்சுவை படத்திற்காக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.[1][2] படத்தின் தயாரிப்பாளர்களாக பி. டி. செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும் இப்படத்தில் சத்யராஜ், லிஸ்சி, இராசேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கபட்டது. நாயகியாக தமன்னாவை முதலில் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவரை இப்படத்தில் கொண்டுவர இயலாததால் அவருக்கு பதிலாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், தயாரிப்பாளர்களுக்கு புலி (2015) படத்தின் தோல்வியும், ஜீவாவுடன் போக்கிரி ராஜா படத்தை தேர்ந்தெடுத்து அவருடன் இணைந்ததால், அவர்கள் இந்தப் படத்தைக் கைவிட்டடனர்.[3][4] இதன்பிறகு இந்த படம் 2017 சூனில் புதிய தயாரிப்பாளரினால் இப்படம் புத்துயிர் பெற்றது. இதன் பிறகு நாயகனாக நடிக்க விமலும் நாயகியாக நடிக்க வரலட்மி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் பெயரை ஜெமினி கணேசன் என்பதற்கு பதிலாக அவரது பட்டப் பெயரான காதல் மன்னன் என்ற பெயரை தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்தனர்.[5][6] 2018 சனவரியில், படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்த நிலையில், படக்குழு இந்த படத்திற்கு கன்னி ராசி என்று பெயர் மாற்றியது.[7][8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia