லட்சுமி மேனன் (நடிகை)
லட்சுமி மேனன் (பிறப்பு: மே 26, 1996) கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.[1] வாழ்க்கைலட்சுமி மேனன் துபாய் கலைஞரான 'ராமகிருஷ்ணன்' மற்றும் நடன ஆசிரியர் 'உஷா' ஆகியோரின் மகள் ஆவார்.[2] இவர் தயார் மல்லாங்கிணறு என்ற ஊரில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடன ஆசிரியர் ஆவர், இங்கு தான் லட்சுமி மேனன் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[3] தொழில்2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். 2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வருகிறார். திரைப்பட விபரம்நடித்த திரைப்படங்கள்
பாடிய பாடல்கள்
மேற்கோள்கள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia