சுகாதார வருகைகள் தேவையில்லை மற்றும் குறைந்த செலவு[1]
ஆணுறை ஒன்றுபெண்ணுறை ஒன்று
கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன.[1]
கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன.[5] ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது.[1][6] பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும்போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது.
ஆணுறையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற விளக்கப்படம்
1564 முதல் கருத்தடை உறைகள், பால்வினை நோய்களின் தாக்கத்திலிருந்து தடுக்கப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.[1]இரப்பரால் செய்யப்பட்ட உறைகள் 1855 இலும், latex ஆல் செய்யப்பட்ட உறைகள் 1920 இலும் பயன்பாட்டுக்கு வந்தன.[2][3] இவை உலக சுகாதார அமைப்பின், அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் பட்டியலில், மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான சுகாதார முறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[8] உலகளவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான முறையாக 10% மானோர் இந்த உறைகளைப் பயன்படுத்தியதாக 2012 இல் வந்த ஒரு அறிக்கை கூறுகின்றது.[9] இந்த உறைகளின் பயன்பாடு வளர்ந்த நாடுகளில் அதிகமாக உள்ளது.[9]ஐக்கிய இராச்சியத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான இரண்டாவது பொதுவான முறையாகவும் (22%), ஐக்கிய அமெரிக்காவில் மூன்றாவது பொதுவான முறையாகவும் (15%) இந்த உறைகளின் பயன்பாடு இருக்கின்றது[10][11] அண்ணளவாக, ஆண்டொன்றுக்கு 6-9 பில்லியன் உறைகள் விற்பனை செய்யப்படுகின்றன.[12]
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணுறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விற்பனை வளர்ந்த நாடுகளில் குறைவாகவே உள்ளது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், எயிட்சு தடுப்புத் திட்டங்கள் இருந்தாலும் கூட, அங்கே இந்த பெண்ணுறைப் பயன்பாடு அவற்றை ஈடுசெய்வதுபோல் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.[13] பெண்ணுறைகளை அணிந்துகொள்ள சாமர்த்தியம் தேவைப்படுவதனாலும், அவற்றின் விலை ஆணுறைகளைவிடவும் அதிகமாக இருப்பதனாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியமான சூழ்நிலையாலும், இவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது.[14] 2005 ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நாடுகளில், 6-9 பில்லியன் ஆணுறைகளும், 12 மில்லியன் பெண்னுறைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.[15] பெண்கள் தாமாகவே திட்டமிட்டு, எயிட்சு நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக எடுக்கக்கூடிய முன்முயற்சியாக பெண்ணுறைகளின் பயன்பாடு இருப்பதனால், இவற்றின் விநியோகத்தை நோயுள்ள நாடுகளில் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அவற்றின் உயர் விலை காரணமாக இம்முயற்சி பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.[15]
வகைகள்
ஆணுறை
பொதுவாக ஆணுறைகள் இரப்பர் மரப்பாலைப் பயன்படுத்தியே தயார் செய்யப்படுகின்றன எனினும், குறைந்தளவில் பொலியூரத்தீன் அல்லது இளம் செம்மறியாட்டின்சிறுகுடல் போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆணுறைகள் இலகுவான பயன்பாடு, இலகுவில் கிடைக்கும் தன்மை, மற்றும் குறைந்தளவு பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் சாதகமானதாக இருக்கின்றன. இறப்பர் மரப்பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், பொலியூரத்தீன் அல்லது வேறு செயற்கைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்தலாம்.[1] ஆணுறைகள் ஒரு தடைவை மட்டுமே பயன்படுத்தப்படும்.
பெண்ணுறை
பெண்ணுறையில் படம்பெண்ணுறையில் படம்
பெண்ணுறைகள் பொதுவாக Polyurethane கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.[6] ஆணுறைகளினால் ஏற்படும் தொற்றுநோய்ப் பாதுகாப்பின் அளவைவிட, பெண்ணுறைப் பயன்பாடு குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது[16]20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட இந்த பெண்ணுறைகள், முதலாவது காரணமாக ஆண்கள் ஆணுறைகள் பயன்படுத்த தயாரில்லாத சூழ்நிலைகளிலும், இரண்டாவதாக காரணமாக ஆண்களிடமிருந்து பால்வினை நோய்கள் பெறப்படுவதிலிருந்து தடுக்கும் நோக்குடனும் பயன்படுத்தப்படுகின்றன.[17][18]
பக்க விளைவுகள்
Latex க்கு ஒவ்வாமை கொண்டவர்களில், தோல் நமைச்சல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும்.[19]
ஒவ்வாமைத் தன்மை அதிகம் கொண்டவர்களாயின், மிகவும் அபாயமான சூழ்நிலையையும் கொடுக்கக்கூடும்.[20] Latex உறைகளின் தொடர்ந்த பயன்பாடு, ஒவ்வாமைத் தன்மையை சிலரில் அதிகரிக்கச் செய்யக்கூடும்.[21]விந்தணுக்களைக் கொல்லக்கூடிய சில பதார்த்தங்கள் இத்தகைய உறைகளில் இருந்தால் அவையும், இப்படியான ஒவ்வாமைத் தன்மைக்குக் காரணமாகலாம்.[22]
↑ 4.04.1Trussell, James (2011). "Contraceptive efficacy"(PDF). In Hatcher, Robert A.; Trussell, James; Nelson, Anita L.; Cates, Willard Jr.; Kowal, Deborah; Policar, Michael S. (eds.). Contraceptive technology (20th revised ed.). New York: Ardent Media. pp. 779–863. ISBN978-1-59708-004-0. ISSN0091-9721. கணினி நூலகம்781956734. Archived(PDF) from the original on 2013-11-12. Retrieved 2018-02-10. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
↑Daniels, K; Daugherty, J; Jones, J; Mosher, W (10 November 2015). "Current Contraceptive Use and Variation by Selected Characteristics Among Women Aged 15-44: United States, 2011–2013.". National health statistics reports (86): 1–14. பப்மெட்:26556545.
↑Angelica Geter and Richard Crosby, "Condom Refusal and Young Black Men: the Influence of Pleasure, Sexual Partners, and Friends", Journal of Urban Health, vol. 91, 2014, pp. 541–546, https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4074317/, retrieved 8 February 2017.