கர்ப்பதானம்

கர்ப்பதானச் சடங்கு (Garbadhan-சமசுகிருதம்:गर्भाधानसंस्कारः பிறப்பு முதல் இறப்பு வரை [[இந்து சமயத்தின் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் இது முதலாவது சடங்கு ஆகும்.இச்சடங்கில் குழந்தை வேண்டி, ஒரு நன்னாள் இரவில் திருமணமான தம்பதியர் தனிமையில் கலவியில் ஈடுபடுவதாகும். இதன் மூலம் ஆண் தனது விந்தை பெண்ணின் யோனியில் செலுத்துவதாகும். இந்த சடங்கில் ஆண் தன் விதையை ஒரு பெண்ணில் வைக்கிறான். தற்காலத்தில் இதனை சாந்தி முகூர்த்தம் [1]என்றும், முதலிரவு என்றும் அழைப்பர்.

வேத மந்திரங்கள்

"ஒருவர் தனது பரம்பரையை முறித்துக் கொள்ளக்கூடாது - அது தொடர வேண்டும் (குழந்தைகளைப் பெறுவதன் மூலம்) என கர்ப்பதானம் குறித்த."கல்ப சூத்திர மந்திரங்கள் கூறுகிறது.. ஒரு குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் இந்த முதல் சம்ஸ்காரத்தின் போது மந்திரங்களால் தங்கள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் பிரம்ம தேவனிடம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணை ஆசிர்வாதம் செய்வதுடன், 100 ஆண்டுகள் வாழும் ஒரு குழந்தையை படைத்தருளும் என வேண்டிக்கொள்ள வேண்டும்.

3 அல்லது 4ம் மாதத்தில் கருவுற்ற பெண்ணுக்கு பும்சவனம் எனும் சடங்கும்; 5 அல்லது 7வது மாதத்தில் வளைகாப்பு எனும் சீமந்தம் சடங்கும் நடைபெறும்..

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya