கல்திருப்பி உள்ளான் (Turnstone) என்பது இரண்டு பறவைசிற்றினங்களைக் கொண்ட பேரினமாகும். இவை இசுகோலோபாசிடேகுடும்பத்தில்அரேனரியாபேரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை கேலிட்ரிட் உள்ளான்களுடன் நெருங்கிய தொடர்புடையன. மேலும் கலிட்ரினி இனக்குழு உறுப்பினர்களாகவும் கருதப்படலாம்.[1]
விளக்கம்
1760ஆம் ஆண்டில் பிரான்சு விலங்கியல் நிபுணர் மாதுரின் ஜாக் பிரிசன் என்பவரால் அரேனரியாபேரினமானதுசெங்கால் கல்திருப்பி உள்ளான் (அரேனரியா இன்டர்பிரெசு) மாதிரி இனத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]அரேனாரியா என்ற பேரினத்தின் பெயர் இலத்தீன் சொல்லான அரேனேரியசு, "மணலில் வசிக்கும்", அரினா "மணல்" என்பதிலிருந்து வந்தது.[4]
அரேனரியா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன: செங்கால் கல்திருப்பி உள்ளான் (அரேனரியா இன்டர்பிரெசு) மற்றும் கருப்பு கல்திருப்பி உள்ளான் ( அரேனரியா மெலனோசெபலா).[5] இரண்டு சிற்றினங்களும் அலைந்து திரிபவை. இவற்றின் நீளம் பொதுவாக 20 முதல் 25 வரை செ.மீ. வரை இருக்கும். இறக்கை நீட்டம் 50 முதல் 60 செ.மீ. வரை இருக்கும். உடல் எடையானது 110 முதல் 130 கிராம் வரையும், குட்டையான, சற்று மேல்நோக்கி, குடைமிளகாய் வடிவ அலகுகளுடன் கூடியதாக இருக்கும். இவற்றின் பின்புறம், இறக்கைகள் மற்றும் வால் ஆகியவற்றில் வெள்ளை நிற திட்டுகள் உள்ளன. இவை ஆர்க்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்து வலசை செல்லக்கூடியன. இவற்றின் வலுவான கழுத்து மற்றும் சக்திவாய்ந்த, தலைகீழான அலகு இவற்றின் உணவு நுட்பத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த சிற்றினங்கள் முதுகெலும்பில்லாத இரையைத் தேடி கற்கள், கடற்பாசி மற்றும் ஒத்த பொருட்களைக் கவிழ்த்துவிடும் தன்மையுடையன.[6] இவை கடற்கரையோரமாகக் காணப்படுபவை. மணலை விடக் கற்கள் நிறைந்த கடற்கரைகளை விரும்புகின்றன. பெரும்பாலும் ஊதா நிற உள்ளான்களுடன் போன்ற பிற வகை கரைப் பறவைகளுடன் கடற்கரை வாழிடத்தை பகிர்ந்து கொள்கின்றன.
சிற்றினங்கள்
இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை:
உயர் ஆர்க்டிக் பனிச்சமவெளியில் இனப்பெருக்கம் செய்கிறது; கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள கடற்கரையோரங்களில் குளிர்காலம் காணப்படும்.[7]
அரேனரியா மெலனோசெபலா
கருப்பு கல்திருப்பி உள்ளான்
வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அலாஸ்காவில் புல் டன்ட்ராவில் இனப்பெருக்கமும் தெற்கு பாஜா கலிபோர்னியாவில் குளிர்காலத்தில் வலசை போதல்.[8]
↑Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode Contenant la Division des Oiseaux en Ordres, Sections, Genres, Especes & leurs Variétés (in French and Latin). Paris: Jean-Baptiste Bauche. Vol. 1, p. 48, Vol. 5, p. 132.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)