கல்லூரி (திரைப்படம்)
கல்லூரி என்பது 2007 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இயக்குநர் சங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிச்சர்ஸ் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் அகில், தமன்னா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நா. முத்துக்குமார் இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். செழியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படமானது 2000 ஆவது ஆண்டில் நடந்த தருமபுரி பேருந்து எரிப்பினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நடிகர்கள்
இசை
நா. முத்துக்குமார் பாடல்வரிகள் எழுதியுள்ளார். ஜோசுவா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.[1] நா. முத்துக்குமார். அனைத்துப் பாடல்களையும் எழுதினார், அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் ஜோசுவா ஸ்ரீதர்.
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "வாழ்க்கையின் வறண்ட பக்கங்களை மறந்து, கல்லூரிக்குள் சிறகடிக்கும் நண்பர்களின் கதை... கவனமாகத்தான் செதுக்கியிருக்கிறார்கள். ஆனாலும், கல்வெட்டாகப் பதியவில்லை கல்லூரி!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[2] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia