ஜீன்ஸ் (திரைப்படம்)
ஜீன்ஸ் (Jeans) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். அசோக் அமிர்தராஜ், சுனந்தா முரளி மனோகர் ஆகியோர் இப்படத்தை தயாரித்தவர்கள். காதலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர் முக்கிய, இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜூ சுந்தரம், இலட்சுமியும், தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர்களும் முக்கியக் கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக நடித்துள்ளனர். நடிகர்கள்
கதைச்சுருக்கம்தனது பாட்டியின் அறுவை சிகிச்சைக்காக, பாட்டியுடன் அமெரிக்காவுக்கு வரும் மதுமதி (ஐஸ்வர்யா ராய்), அங்கே தனது மாமா வந்து அழைத்துச் செல்லாததால் வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். அமெரிக்காவில் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் உணவகம் நடத்திக் கொண்டும் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் விசு (பிரசாந்த்) ஐஸ்வர்யா ராய்க்கு உதவுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. தயாரிப்புவெளியீடுபாடல்கள்மிகச் சிறப்பான வெற்றிப் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia