ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)

ச. சங்கர்

இயற் பெயர் ஷங்கர் சண்முகம்
பிறப்பு ஆகத்து 17, 1963 (1963-08-17) (அகவை 61)
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தொழில் இயக்குநர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1990-தற்போது
இணையத்தளம் http://www.directorshankar.com/

ஷங்கர் (ஆங்கிலம்: Shankar) (பிறப்பு: ஆகத்து 17[1], 1963) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பணியாற்றிய படங்கள்

இயக்குநராக

ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1993 ஜென்டில்மேன் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினீத், மனோரமா, மா.நா.நம்பியார் தெலுங்கில் ஜென்டில்மேன் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.

1994 காதலன் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ். பி. பாலசுப்ரமணியம், ரகுவரன், கிரீஸ் கர்னாடு

இந்தியில் ஹம்சே ஹை முக்காபலா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
தெலுங்கில் ப்ரேமிகுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1996 இந்தியன் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு

இந்தியில் ஹிந்துஸ்தானி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் பாரதீயுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1998 ஜீன்ஸ் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராஜு சுந்தரம், லக்ஷ்மி இந்தியில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
1999 முதல்வன் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2001 நாயக்:உண்மை நாயகன் அனில் கபூர், ராணி முகெர்ஜி, அம்ரிஷ் பூரி, சுஷ்மிதா சென் இந்தி திரைப்படம்
2003 பாய்ஸ் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல் தெலுங்கில் பாய்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2005 அந்நியன்[2] விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், யானா குப்தா, நாசர், நெடுமுடி வேணு இந்தியில் அபரிசித் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007 சிவாஜி: தி பாஸ் ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன், மணிவண்ணன் தெலுங்கில் சிவாஜி: தி பாஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2010 எந்திரன் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் இத்திரைப்படம் உலகம் முழுவதிலும் பலநாட்கள் ஓடி சாதனை புரிந்தது
2012 நண்பன் விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,இலியானா,சத்யராஜ் திரீ இடியட்ஸ்(2009) இந்தி படத்தின் மீளுருவாக்கம்.[3]
2015 விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி 2015 தைப்பொங்கல் அன்று வெளிவந்தது
2018 2.0 ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் 2.0 அல்லது எந்திரன் 2 இந்திய சினிமாவில் மிக அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படம்.

தயாரிப்பாளராக

ஆண்டு படம் நடிகர்கள் குறிப்புகள்
1999 முதல்வன் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், லைலா, ரகுவரன் தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2004 காதல் பரத், சந்தியா தெலுங்கில் ப்ப்ரேமிச்டே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006 இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி வடிவேலு, தேஜாஸ்ரீ, நாகேஷ், மனோரமா, நாசர் தெலுங்கில் ஹிம்சராஜா 23வா புலிகேசி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006 வெயில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி தெலுங்கில் வேசவி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007 கல்லூரி அகில் , தமன்னா
2008 அறை எண் 305-இல் கடவுள் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிர்மயி
2009 ஈரம் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன்
ரெட்டைசுழி கே.பாலசந்தர், பாரதிராஜா, அஞ்சலி

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்: சாமானியர்களையும் சென்றடைந்த பிரம்மாண்ட சாதனையாளர்". Hindu Tamil Thisai. Retrieved 2021-12-29.
  2. ""அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது"". BBC News தமிழ். Retrieved 2021-12-29.
  3. Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan

வெளியிணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya