களஹாண்டி மாவட்டம்

களஹாண்டி மாவட்டம், (Odia: କଳାହାଣ୍ଡି, {Kalahandi district) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பவானிபட்டணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் களஹண்டி சமஸ்தானத்தில் இருந்தது.

மாவட்ட விவரம்

கலஹந்தி / களஹண்டி (கருப்புச் சட்டி) மாவட்டத்தின் தோற்றம் குறித்து அரசு அறிவிக்கை, ஆகத்து மாதம் 15, 1980 ஆண்டு வெளியானது. இந்த மாவட்டம் முன்னாள் மாநில கலஹந்தியில் காஷிப்பூர் காவல் நிலையம் நீங்கலாக, கரியாரின் ஜமிசாரி நுவாபாடாவின் துணைப் பிரிவாக இருந்தது. இப்போது அது நுவாபா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஒடிசா மாகாணத்துடன், சுதேச மாநிலங்கள் இணைக்கப்பட்டன. அப்போது முன்னாள் மாநிலமான கலஹந்தி மாநிலமும், முன்னாள் பாட்னா மாநிலமும், சோனேபூரும் இணைந்து கலஹந்தி மாவட்டத்தை உருவாக்கினர். நவம்பர் 1, 1949 அன்று, பாட்னாவும், சோனேபூர் பகுதிகள் பிரிக்கப்பட்டு, மாவட்ட பாலங்கிர் அமைக்கப்பட்டது. பாட்னா, பின்னர் பால்ங்கீர் ஆகவும், சோனேபூர் பின்னர் சுபர்னாபூர் மாவட்டமாகவும் மாறின. ஏப்ரல் 1, 1936 முதல் சமபல்பூர் மாவட்டத்தின், ஒரு பகுதியாக அமைந்த நுவாபாடா துணைப்பிரிவுடன் இணைந்து, முன்னாள் கலஹந்தி மாநிலமும், பவானி பட்னாவில் தலைமையகத்துடனும், ஒரு தனி மாவட்ட கலஹந்தி மறுசீரமைக்கப் பட்டது. இம்மாவட்ட தலைமையகத்துடன் நேரடி தகவல் தொடர்பு இல்லாததால், காஷிப்பூர் காவல் நிலையம் அடங்கிய பகுதி நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியதால், அது 1962 ஆகஸ்ட் 1 ஆம் தேதி கலஹந்தியில் இருந்து பிரிக்கப்பட்டது. மேலும், நுவாபா துணைப்பிரிவு 1993 மார்ச் 27 அன்று, கலஹந்தியில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டத்தை நுவாபாடாவாக உருவாக்கப் பட்டது.

மாவட்டத்தின் பெயரின் தோற்றம் பழைய நடுவன் மாகாணங்களின் பதிவுகளின் படி, இந்த மாவட்டத்தின் பெயர் குறித்த ஐயம் இருந்தாலும், அது எப்போதும் ஒடிசாவில் கலஹந்தி (கருப்பு பானை) என்று அழைக்கப் படுகிறது. ஒடிசாவில் பெயர் பற்றி, எந்த சர்ச்சையும் இல்லை. இந்த மாவட்ட மற்றும் சுற்றுப்புற சந்தைகளில் முக்கியமாக இருந்த குயவர்களின் சக்கரத்திலிருந்து கருப்பு தொட்டிகளை வெளியே கொண்டு வரும், கருப்பு பருத்தி மண்ணுடன் தொடர்புடையப் பெயராக இருக்கக்கூடும் என்பது ஊகமாக இருக்கலாம்.

1856 ஆம் ஆண்டு, இராய்ப்பூர் துணை ஆணையர் லெப்டினன்ட் எலியட் கருத்துப்படி, “இந்த சார்பு நாக்பூர் பக்கத்தில் கரோண்டே (கரோண்ட்) என்று மட்டுமே அறியப்படுகிறது, ஒரியா பெயர் கலஹந்தி, மற்றும் முந்தைய பெயருடன் தொடர்புடைய இடமோ கிராமமோ இல்லாததால், அரசு கணக்குகளில் முதலில் உள்ளிடப்பட்டிருந்தாலும், பிந்தையவற்றில் தவறு இருக்கலாம். ”கோராபுட் மற்றும் பஸ்தார் எல்லைப் பகுதியில், ஒருவர் அத்தகைய பெயர்களைக் காண முடியும். ஒரே மாதிரியான ஒலிப்பு மாறுபாடுகளுடன், இது மேற்கூறிய ஊகத்திற்கு ஒத்துழைத்தது. பஸ்தாரில் உள்ள கிராமம், பகாவொண்டை ஒரியாக்கள் பக்காஹந்தி என்றும், பஜாவந்த் பஜாஹந்தி என்றும், நல்பவொண்ட் நல்பாண்டியாகவும், குமார்வாண்ட் மற்றும் குமார்ஹந்தி என்றும் அழைக்கிறார்கள். இதேபோல் கோட்பாட் சசாஹந்தி மற்றும் பாப்பாடஹந்திக்கு அருகிலுள்ள கிராமத்தை, பாஸ்டர் மக்களால், முறையே சசாவோண்ட் மற்றும் பாப்பாடோண்ட் என்று அழைக்கின்றனர். ஆனால் 1905 ஆம் ஆண்டு முதல், இந்த நிலப்பகுதி வங்காள அதிபரின் ஆட்சியின், ஒரு பகுதியை உருவாக்கியதில் இருந்து, கலஹந்தி என்ற பெயர் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய கலஹந்தி மாவட்டம் 7920 சதுர கி.மீ புவியியல் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பரப்பளவைக் கொண்ட 19.175489 முதல் 20.454517 வரையுள்ள வடக்கு அட்சரேகையையும், 82.617767 முதல் 83.794874 வரையிலான கிழக்கு தீர்க்கரேகையையும் கொண்டு அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் காலநிலை தீவிர வகையானது. இது மழைக்காலத்தினைத் தவிர, மற்ற காலங்களில் உலர்ந்தே காணப்படுகிறது. இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை 45+ டிகிரி செல்சியஸ் ஆகும். அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையை 1378.20 மி.மீ. எனத் தெரிய வருகிறது. பருவமழை சூன் மாத இறுதியில் தொடங்கி பொதுவாக செப்டம்பர் வரை நீடிக்கிறது. இம்மாவட்டம் பெரும்பாலும், வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரத்தைப் பெற்றுள்ளது.

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 13 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: பவானிபட்டணா, கேசிங்கா, லாஞ்சிகட், நார்ளா, கரியாமுண்டா, ம.ராம்பூர், து.ராம்பூர், தரம்கட், ஜுனாகட், கோக்சரா, ஜய்பட்டணா, கலாம்பூர், கோலாமுண்டா ஆகியன.

இதை லாஞ்சிகட், ஜுனாகட், தரம்கட், பவானிபட்டணா, நார்ளா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

இந்த மாவட்டம் களாஹாண்டி மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-14.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya