கோராபுட் மாவட்டம்
கோராபுட் மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோராபுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தில் உள்ள கோராபுட் மற்றும் ஜெய்பூர் பெரிய நகரங்களாகும். உட்பிரிவுகள்இந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கோராபுட், சிமிளிகுடா, நந்தபூர், பட்டாங்கி, தஸ்மந்துபூர், லம்டாபுட், லட்சுமிபூர், நாராயணபட்ணா, பந்துகாவ், ஜெய்ப்பூர், பைபாரிகுடா, கோட்பாடு, குண்டுரா, போரிகுமா ஆகியன. இது லட்சுமிபூர், கோட்பாடு, ஜெய்ப்பூர், கோராபுட், பட்டாங்கி, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1] இந்த மாவட்டம் கோராபுட், நபரங்குபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1] நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4] போக்குவரத்துஇதனையும் காண்கசான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia