காக அலகு கரிச்சான்
காக அலகு கரிச்சான் (Crow-billed drongo)(டைகுருசு அனெக்டென்சு) என்பது கரிச்சான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தென்கிழக்காசியாவின் ஈரமான வெப்பமண்டல காடுகளில் காணப்படுகிறது. இது இந்தியாவின் பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா வரை பரவியுள்ளது. இது முழுவதும் கருமையாகக் காணப்படும் பறவையாகும். இதனுடைய வால் நன்கு பிளவுபட்ட முட்கரண்டி போலக் காணப்படும். இது தோற்றத்தில் இரட்டைவால் குருவி போன்று காணப்படும். இது ஏப்ரல் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் இனப்பெருக்கம் செய்கிறது. மரக்கிளையின் பிளவில் கோப்பை வடிவில் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டைகளை அடைகாக்கும். பொதுவாகக் காணப்படும் இந்த கரிச்சான் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிட்டுள்ளது. வகைப்பாட்டியல்1836ஆம் ஆண்டில் ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் பிரையன் ஹொக்டன் ஹோட்சன் என்பவரால் காக அலகு கரிச்சான் முதலில் விவரிக்கப்பட்டது. இதற்கு புச்சாங்கா அனெக்டான்சு என்ற இருசொல் பெயர் வழங்கப்பட்டது.[2] குறிப்பிட்ட அடைமொழியானது இலத்தீன் வார்த்தையான அனெக்டென்சின் எழுத்துப்பிழை ஆகும். அதாவது "இணைத்தல்" என்று பொருள்படும்.[3] விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டு ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றி, தற்போதைய விலங்கியல் பெயரான டைகுருசு அனெக்டென்சு என வழங்கப்பட்டது.[4] தற்போதைய பேரினமான டைகுருசு 1816-ல் பிரெஞ்சு பறவையியலாளர் லூயிஸ் பியர் வைலோட்டால் அறிமுகப்படுத்தப்பட்டது. விளக்கம்இரட்டைவால் குருவி போன்று காணப்படும் இந்தப் பறவை, கருப்பு நிறத்திலும், தடிமனான அலகுடனும் இருக்கும். இது ஒரு முட்கரண்டி வாலினைக் கொண்டது.[5] பரவல்இது வங்காளதேசம், பூடான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.[1] நடத்தைஇந்த சிற்றினம் அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில் வாழ்கிறது. கூடு கட்டும் காலம் ஏப்ரல் முதல் சூன் வரை. கூடு என்பது பொதுவாகப் புல்லால் செய்யப்பட்ட ஒரு சிறிய கோப்பை வடிவிலிருக்கும். மெல்லிய கிளையின் பிளவில் இதன் கூடுகளைக் காணலாம். பெண் பறவை முட்டைகளை அடைகாக்கும். இருப்பினும், ஆண் மற்றும் பெண் பறவைகள் கூடு கட்டுகின்றன.[5] உணவுஇந்த சிற்றினம் பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளைச் சாப்பிடுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia