காத்தான்குடி
காத்தான்குடி கிழக்கிலங்கையில் ஒரு நகரமாகும். தலை நகரான கொழும்பில் இருந்து 339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2. 56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப்பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும். இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும், எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன.[1][2][3][4] நகர எல்லைகள்வடக்கு: மண்முனை வடக்கு பிரதேச செயலகம். கிழக்கு: வங்காள விரிகுடா (கடல்). தென்: மண்முனை பற்று பிரதேச செயலாளர். மேற்கு: மட்டக்களப்பு வாவி. GS பிரிவுகள் மற்றும் மக்கள் தொகை (2014)
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைஇங்கு காணப்படும் பள்ளிவாசல் ஒன்றில் 1990, ஆகஸ்ட் 3 அன்று இரவுத் தொழுகை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் 147 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர். இது காத்தான்குடி படுகொலைகள் என அழைக்கப்படுகிறது. இத்தாக்குதலின் துப்பாக்கி ரவை துளைகள் இன்றும் இப்பள்ளிவாயல் சுவர்களில் அழியாச் சுவடுகளாய் காணப்படுகின்றன. சுனாமி (2004)2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கிய சுனாமிப் பேரலையில் காத்தான்குடியில் 108 பேர் உயிரிழந்தனர் மற்றும் 93 பேர் காணாமல் போயினர். சுமார் 2500 வீடுகள் சேதமடைந்தன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia